46வது புத்தக கண்காட்சியின் நிறைவு விழா...பாராட்டுச் சான்றிதழ்களை பெறப்போவது யார்?

46வது புத்தக கண்காட்சியின் நிறைவு விழா...பாராட்டுச் சான்றிதழ்களை பெறப்போவது யார்?
Published on
Updated on
1 min read

சென்னை நந்தனம் ஒய்.எம்,சி.ஏ மைதானத்தில் நடைபெற்று வந்த 46-வது புத்தக கண்காட்சி இன்று மாலையுடன் நிறைவடைகிறது. 

புத்தகக் கண்காட்சி :

தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் சார்பில் நந்தனம் ஒய்.எம்,சி.ஏ மைதானத்தில் கடந்த 6ஆம் தேதி 46வது புத்தக கண்காட்சி தொடங்கியது. இதில் 800 அரங்குகள் அமைக்கப்பட்டிருந்த நிலையில், கடந்த 17 நாட்களாக புத்தக கண்காட்சிக்கு தினமும் ஆயிரக்கணக்கில் பொதுமக்கள் வந்திருந்து புத்தகங்களை வாங்கிச் சென்ற வண்ணம் இருந்தனர்.

நிறைவு விழா :

இந்நிலையில் கடந்த 17 நாட்களாக சிறப்பாக நடைபெற்று வந்த புத்தக கண்காட்சி இன்றுடன் நிறைவடையவுள்ள நிலையில், இன்று மாலை 6 மணிக்கு புத்தக கண்காட்சி நிறைவு விழா நடைபெறவுள்ளது.

பாராட்டுச் சான்றிதழ் :

இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி அரங்க மகாதேவன் கலந்துக் கொண்டு பேசவுள்ளார். அத்துடன் நிகழ்ச்சியில், பதிப்பகத் துறையில் பணிபுரிந்த 25 பணிபுரிந்தவர்களையும் புத்தகக் கண்காட்சி நடைபெறுவதற்கு துணைபுரிந்தவர்களையும் கவுரவித்து பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படவுள்ளன.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com