இடைத்தேர்தல் பரபரப்புக்கு மத்தியில்...திடீரென குஜராத் பறந்த ஓபிஎஸ்...!காரணம் இதுதானா?

இடைத்தேர்தல் பரபரப்புக்கு மத்தியில்...திடீரென குஜராத் பறந்த ஓபிஎஸ்...!காரணம் இதுதானா?
Published on
Updated on
1 min read

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பரபரப்புக்கு மத்தியில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் திடீரென குஜராத் சென்றுள்ளார்.

குஜராத்துக்கு பயணம் மேற்கொண்டுள்ள ஓபிஎஸ்:

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட உள்ளதாக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று அறிவித்தார். இதனை தொடர்ந்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, தமாக தலைவர் ஜி.கே வாசன் உள்ளிட்ட கூட்டணி தலைவர்களை சந்தித்து ஆதரவு திரட்டினார்.

இந்த நிலையில் ஓ.பன்னீர்செல்வம் திடீரென குஜராத் மாநிலம் அகமதாபாத்துக்கு இன்று காலையில் புறப்பட்டு சென்றுள்ளார். அங்கு தமிழர்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் சமத்துவ பொங்கல் விழாவில் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டதன் பேரில் அவர் பயணம் செய்துள்ளதாக கூறப்படுகிறது. ஓபிஎஸ் உடன் மனோஜ் பாண்டியன் உட்பட 3 பேர் பயணம் மேற்கொண்டுள்ளனர்.

இதனிடையே, குஜராத்துக்கு பயணம் மேற்கொண்டுள்ள ஓபிஎஸ், குஜராத்தில் பாஜகவின் முக்கிய பிரதிநிதிகளை சந்தித்து ஆலோசனை மேற்கொள்ள உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com