12 மணி நேர வேலை மசோதா அதிகாரப்பூர்வமாக வாபஸ்...உறுப்பினர்களுக்கு கடிதம்!

12 மணி நேர வேலை மசோதா அதிகாரப்பூர்வமாக வாபஸ்...உறுப்பினர்களுக்கு கடிதம்!

12 மணி நேர வேலை மசோதா அதிகாரப்பூர்வமாக வாபஸ் பெறப்பட்டதாக தமிழ்நாடு சட்டப்பேரவை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. 

தமிழ்நாட்டில் தொழிற்சாலைகள், நிறுவனங்களில் 12 மணி நேர வேலைக்கு வகை செய்யும் சட்டத் திருத்த மசோதா, தமிழ்நாடு சட்டப்பேரவையில் கடந்த ஏப்ரல் 21-ம் தேதி, பல்வேறு கட்சி உறுப்பினர்களின் எதிர்ப்பையும் மீறி நிறைவேற்றப்பட்டது.

இதையும் படிக்க : செந்தில் பாலாஜி மதுவிலக்குத்துறை அமைச்சரா அல்லது மது விற்பனைத்துறை அமைச்சரா? - அன்புமணி கேள்வி!

இந்த சட்டத் திருத்த மசோதாவிற்கு அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் ஆளும் கட்சி உள்ளிட்ட அனைத்து தொழிற்சங்கங்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இதனைத் தொடர்ந்து, 12 மணிநேர வேலை தொடர்பான சட்டத் திருத்த மசோதா திரும்ப பெறப்படுவதாக மே தின நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்தார்.

இந்நிலையில், 12 மணி நேர வேலைக்கான சட்டத் திருத்த மசோதா அதிகாரப்பூர்வமாக வாபஸ் பெறப்பட்டதாக தமிழ்நாடு சட்டப்பேரவை செயலாளர் ஸ்ரீனிவாசன் தெரிவித்துள்ளார். இது தொடர்பான கடிதம், அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதில், ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்புவதற்கு முன்னரே, வாபஸ் பெறுவதாக முதலமைச்சர் அறிவித்த நிலையில், சட்டமுன்வடிவு அரசால்  திரும்பப் பெறப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.