152 வது தைப்பூச ஜோதி தரிசனப் பெருவிழா...ஏழு திரை நீக்கி காண்பிக்கப்பட்ட ஜோதி தரிசனம்...!

152 வது தைப்பூச ஜோதி தரிசனப் பெருவிழா...ஏழு திரை நீக்கி காண்பிக்கப்பட்ட ஜோதி தரிசனம்...!

கடலூர் மாவட்டம் வடலூரில் தைப்பூச ஜோதி தரிசனப் பெருவிழாவை முன்னிட்டு சத்திய ஞான சபையில் 7 திரை நீக்கி ஜோதி தரிசனம் காண்பிக்கப்பட்டது. 

வடலூரில் வள்ளலாம் நிறுவியசத்திய ஞான சபையில் 152-வது ஆண்டு தைப்பூசப் பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதைதொடர்ந்து தைப்பூச ஜோதி தரிசனப் பெருவிழாவை முன்னிட்டு சத்திய ஞான சபையில் 7 திரை நீக்கி ஜோதி தரிசனம் காண்பிக்கப்பட்டது. கருமை, நீலம் என நிற அடர்த்தி குறைந்து வரும் 7 திரைகள் விலக ஜோதி தரிசனம் தெரிந்ததை அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெரும் ஜோதி தனிப்பெருங்கருணை என பக்தி முழக்கத்துடன் பக்தர்கள் தரிசனம் செய்தனர். 

இதையும் படிக்க : சர்ப்ப காவடி எடுத்தால் சட்டப்படி நடவடிக்கை......

கடலூர் மாவட்டம் மட்டுமல்லாமல் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் வடலூரில் தங்கி தரிசித்தனர். தொடர்ந்து பக்தர்களின் பாதுகாப்பிற்காகவும்,  குற்ற நிகழ்வுகளைத் தடுக்கவும் 800 போலீசார் சுழற்சி முறையில் பணியாற்றி வருகின்றனர்.