சர்ப்ப காவடி எடுத்தால் சட்டப்படி நடவடிக்கை......

சர்ப்ப காவடி எடுத்தால் சட்டப்படி நடவடிக்கை......
Published on: 
Updated on: 
1 min read

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இன்று தைப்பூச திருவிழா நடைபெறுவதை முன்னிட்டு பக்தா்கள் கடற்கரையில் குவிந்து வருகின்றனா். 

இரண்டாம் படை:

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தைப்பூச திருவிழா இன்று வெகுவிமா்சையாக நடைபெறவுள்ளது.  அதற்கான ஏற்பாடுகளை கோயில் நிா்வாகத்தினா் தீவிரமாக செய்து வருகின்றனா்.  அதனை முன்னிட்டு பல்வேறு பகுதிகளில் இருந்து திராளமான பக்தா்கள் அலகு குத்தி, பாதயாத்திரையாக வந்து கடற்கரை பகுதியில் குவிந்து வருகின்றனா். 

பாதுகாப்பு பணிகள்:

இதற்கிடையே கோயிலுக்கு சா்ப்ப காவடி எடுத்து வருபவா்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  அசம்பாவிதங்களைத் தவிர்க்க   600 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.  இதேபோல் இன்றும் பல்வேறு பகுதிகளில் உள்ள முருகன் கோயில்களில் தைப்பூச திருவிழா கொண்டாடப்படவுள்ளது. 

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com