புதிய சிசிடிவி கேமராக்கள் பொருத்தம்...

தாம்பரம் அருகே குற்றங்களை தடுக்கும் வகையில் குடியிருப்போர் நலச்சங்கம் சார்பில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டது.
புதிய சிசிடிவி கேமராக்கள் பொருத்தம்...
Published on
Updated on
1 min read

தாம்பரம் அடுத்த  வரதராஜபுரம் ஊராட்சியில் பாரத் நகர்  குடியிருப்போர் பொது சங்கம் சார்பில் நகர்  குற்றங்கள் தடுக்கும் வகையில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தும் நிகழ்வு நடைபெற்றது.

இந்த கேமராக்களை  சிறப்பு அழைப்பாளராக மணிமங்கலம்  காவல்துறையினர்  கலந்து கொண்டு ரிப்பன் வெட்டி துவக்கி வைத்தனர்.

மேலும் நிகழ்ச்சியை துவக்கி வைத்த காவல்துறையை அதிகாரி கூறும் பொழுது இங்கிருக்கும் பொதுமக்கள் ஒவ்வொரு வீட்டிலும் சிசிடிவி கேமரா அமைக்க வேண்டும் என்றும் வெளியூர் செல்லும்போது தவறாமல் காவல்துறையினரிடம் சொல்லிவிட்டு செல்லுங்கள் இரவு நேரங்களில் உங்கள் வீட்டை பாதுகாப்பு கொடுப்போம் என்று அப்பகுதி மக்களுக்கு வேண்டுகோள் விடுத்தார்.. மேலும் இருசக்கர வாகனத்தில் ஜிபிஎஸ் பொருத்துமாறு வேண்டுகோள் விடுத்தனர்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com