திமுக ஆட்சியில் மக்களுக்கு பாதுகாப்பற்ற நிலை மாறி...காவல்துறைக்கே பாதுகாப்பற்ற நிலை உருவாகியுள்ளது - ஈபிஎஸ் குற்றச்சாட்டு!

திமுக ஆட்சியில் மக்களுக்கு பாதுகாப்பற்ற நிலை மாறி...காவல்துறைக்கே பாதுகாப்பற்ற நிலை உருவாகியுள்ளது - ஈபிஎஸ் குற்றச்சாட்டு!

திமுக ஆட்சியில்  மக்களுக்கு பாதுகாப்பற்ற நிலை மாறி தற்போது காவல்துறைக்கே பாதுகாப்பற்ற நிலை உருவாகியுள்ளதாக எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

பெரியகுளத்தில் இரு தரப்பினர் இடையேயான மோதலால் ஒரு பெண் ஆய்வாளர் உட்பட 8 காவலர்கள் தாக்கப்பட்ட சம்பவம் குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை வெளியிட்டுள்ளார்.

இதையும் படிக்க : "இளைஞர்களின் கனவுகளுக்கு புதிய சிறகுகளை அளிக்கும் முடிவு " - பிரதமர் மோடி ட்வீட்!

அந்த அறிக்கையில், பெரியகுளத்தில் இருதரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில் பெண் காவல் ஆய்வாளர் உட்பட 8 காவலர்கள் தாக்குதலுக்குள்ளான சம்பவம்  தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து விட்டதற்கான சாட்சியமாக உள்ளதாக கூறியுள்ளார். இனியும் இது போன்ற தாக்குதல்கள் நடைபெறாமல் தடுக்கவும் பொது அமைதியைக் காக்கவும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டுமென திமுக அரசை வலியுறுத்துவதாக குறிப்பிட்டுள்ளார்.

பெரியகுளத்தில் இரு தரப்பினர் இடையேயான மோதலால் ஒரு பெண் ஆய்வாளர் உட்பட 8 காவலர்கள் தாக்கப்பட்டு,காவல் நிலையம் அருகே நிறுத்தி வைக்கப்பட்டுள்ள ஆம்புலன்ஸ்,வாகனங்கள் உட்பட காவல்நிலையமே முழுமையாக தாக்குதலுக்கு உட்பட்டு இருப்பது மிகுந்த வேதனையளிக்கிறது ,
இதனால் தேனி மாவட்டம்… pic. twitter.com/A0cZU766GP

— Edappadi K Palaniswami (@EPSTamilNadu) April 15, 2023