கனவுகளை நிறைவேற்ற மொழி ஒரு தடையில்லை..... பிரதமர் மோடி!!!

கனவுகளை நிறைவேற்ற மொழி ஒரு தடையில்லை..... பிரதமர் மோடி!!!
Published on
Updated on
1 min read

கனவுகளை நிறைவேற்ற மொழி ஒரு தடையில்லை என்பதையே சி.ஏ.பி.எஃப் அறிவிப்பு காட்டுகிறது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.  

சிஏபிஎஃப் என அழைக்கப்படும் மத்திய ஆயுதப்படை காவலர்களுக்கான தேர்வு இந்தி மற்றும் ஆங்கிலத்தில் மட்டுமே நடைபெற்று வந்த நிலையில், இனி தமிழ், கன்னடம், மலையாளம் உட்பட 13 பிராந்திய மொழிகளில் நடைபெறும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. 

இதனிடையே சிஏபிஎஃப் தேர்வுகள் தமிழ், கன்னடம், மலையாளம் உட்பட 13 பிராந்திய மொழிகளில் நடத்தப்படும் என மத்திய உள்துறை அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.  சிஏபிஎஃப் என அழைக்கப்படும் மத்திய ஆயுதப்படை காவலர்களுக்கான தேர்வு இந்தி மற்றும் ஆங்கிலத்தில் மட்டுமே நடைபெற்று வந்த நிலையில் இனி தமிழ், கன்னடம், மலையாளம் உட்பட 13 பிராந்திய மொழிகளில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  மேலும் இது உள்ளூர் இளைஞர்களின் பங்கேற்புக்கு உத்வேகத்தை அளிக்கும் எனவும் அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது.

இந்நிலையில் இளைஞர்களின் கனவுகளுக்கு புதிய சிறகுகளை அளிக்கும் இந்த முடிவு எனக்கூறி இந்த அறிவிப்பினை வரவேற்று பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.  கனவுகளை நிறைவேற்ற மொழி ஒரு தடையில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com