ஆளுநர் மாளிகை முற்றுகை...! இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்..!

ஆளுநர் மாளிகை முற்றுகை...! இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்..!

இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட இளைஞர்கள் ஆளுநர் ஆர்.என்.ரவியை திரும்ப பெறக் கோரி சின்னமலையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாநிலச் செயலாளர் சிங்காரவேலன் செய்தியாளர்களிடம் பேசிய போது, ஆளுநர் மக்களுக்கு எதிராக செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். அவரை திரும்ப பெற வேண்டுமென வலியுறுத்தி இன்று ஆளுநர் மாளிகை முற்றுகை போராட்டத்தை தாங்கள் நடத்திக் கொண்டிருக்கிறோம்.

தொடர்ந்து அவரின் சர்ச்சைக்குரிய பேச்சுக்களும் அவருடைய செயல்பாடுகளும் தமிழகத்தில் ஒரு மிகப்பெரிய மக்கள் சீர்குலைவை உருவாக்கிக் கொண்டிருக்கிறது. தமிழகத்தில் இருக்கக்கூடிய இளைஞர்கள் ஒவ்வொரு வாரமும் இரண்டு மூன்று இளைஞர்கள் என ஏறக்குறைய 30க்கும் மேற்பட்ட இளைஞர்கள் ஆன்லைன் ரம்மியால் தற்கொலை செய்து  கொண்டிருக்கிறார்கள். ஆன்லைன் ரம்மியை தடை செய்ய வேண்டும் என்று தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றிய பின்னர் கூட ஆளுநர் அதை குடியரசு தலைவருடைய கவனத்திற்கு கொண்டு செல்லாமல் கிடப்பில் போட்டு இருக்கிறார். இதுவரை தமிழகத்தினுடைய இளைஞர்கள் இறப்பிற்கு தமிழக ஆளுநர் ரவி தான் காரணம் என்கிற குற்றச்சாட்டை தாங்கள் முன்வைக்கிறோம் என கூறினார். 

அதேபோன்று தமிழகத்தில் நீட் தேர்வை தடை செய்ய வேண்டும், நீட் தேர்வு அனுமதிக்க கூடாது என்று தமிழக சட்டமன்றத்தில் இரண்டு முறை தீர்மானம் நிறைவேற்றிய பின்னர் கூட இதுவரை நீட் தேர்வை நிறுத்துவதற்கான அந்த மசோதாவை குடியரசு தலைவர் கவனத்திற்கு கொண்டு செல்லாமல் கிடப்பில் போட்டுள்ளார். இது ஒன்று. ஏறக்குறைய 20 மசோதாக்களை கிடப்பில் போட்டிருக்கக் கூடிய ஆளுநர் ஆர் என் ரவி,  தமிழகத்திற்கும் தமிழக மக்களுக்கும் எதிராக தொடர்ந்து செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். தமிழக ஆளுநர் ரவி  நேற்றைக்கு முன் தினம் ஒரு நிகழ்ச்சியில் பேசும் போது, இந்திய நாட்டினுடைய அரசியல் அமைப்பு சட்டம் உட்பட ராமராஜ்ஜியத்தை வலியுறுத்தக்கூடியது என்றும் தமிழுக்கும் தமிழருக்கும் முரணாக பேசிவருகிறார். இது போல மிக மோசமான கருத்துக்களை, இந்திய நாட்டின் ஒருமைப்பாட்டிற்கு எதிரான கருத்துகளை முன்வைத்துக் கொண்டிருக்கிறார் என்றார்.

இதேபோன்று உலகப் பொதுமறை என்று போற்றப்படுகிற திருக்குறளை, முழுக்க முழுக்க ஆன்மீக கருத்துகளை வலியுறுத்துகிறது என்று மிக மோசமான  நச்சு கருத்துக்களை தமிழ்நாட்டில், தமிழ் மொழிக்கு எதிராக தமிழக மக்களுக்கு எதிராக விதைத்துக் கொண்டிருக்கிறார்.

இந்தியாவில் மோடி அரசாங்கம் பிஜேபி ஆளாத மாநிலங்களில் ஆளுநர் மூலமாக மறைமுகமாக பிஜேபி அரசை நடத்துவதற்கு முயற்சித்துக் கொண்டிருக்கிறது. அதனுடைய கைப்பாவையாக தமிழக ஆளுநர் ரவி, தமிழ்நாட்டில் ஆர்எஸ்எஸ் ஊழியராக பிஜேபி கட்சியினரைப் போன்று அவருடைய செயல்பாடு தொடர்ந்து இருந்து கொண்டிருக்கிறது. எனவே இது தமிழகத்தினுடைய நலனுக்கு எதிரானது தமிழக மக்களுக்கு எதிரானது. இவர் முழுமையாக தமிழகத்தில் இருந்து திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தி ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துகிறோம். அடுத்த கட்ட போராட்டமும் ஆளுநரை முழுமையாக தமிழகத்தில் இருந்து திரும்பப் பெறுவதை வலியுறுத்தி  தொடர்ச்சியான போராட்டங்களை இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் தொடர்ந்து முன்னெடுப்போம் என தெரிவித்தார். 

பிரதமர் நரேந்திர மோடி தான் இந்தியா முழுக்க பொய் சொல்ல கூடிய பிரதமர் என்று சொல்லிக் கொண்டிருக்கிறோம். அவருக்கு நிகராக இன்றைக்கு தமிழகத்தில் மிகப்பெரிய பொய் பேசக்கூடிய நபராக பாஜக தலைவர் அண்ணாமலை செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். அதைவிட மிக முக்கியமாக அவர் மிகப்பெரிய விளம்பரத்தை தேடிக் கொண்டிருக்கிறார். ஒருநாள் விட்டு ஒரு நாள் பத்திரிக்கையாளர் சந்திப்பு மூலம் அண்ணாமலை தனக்கான விளம்பரத்தை தேடுவதற்காக பல பொய்யான கருத்துக்களை விதைத்துக் கொண்டே இருக்கிறார். அதை நாங்கள் ஏற்கவில்லை. இப்போது மட்டுமல்ல நீட் தேர்வு அறிவித்ததில் இருந்து வாலிபர் சங்கம் தொடர்ந்து போராட்டத்தை முன்னெடுக்கிறோம். 

இப்போதும் நீட் தேர்வு வேண்டாம் என தமிழகத்தில் விலக்களிக்க வேண்டும் என்று தமிழகத்தினுடைய சட்டமன்றத்தில் நிறைவேற்றிய தீர்மானத்தை அமல்படுத்த வேண்டும் என்ற போராட்டத்தை தொடர்ந்து முன்னெடுக்கும் போது தமிழக அரசாங்கம் ஏற்கனவே சட்டமன்றத்தில் பிஜேபி அரசினுடைய கைப்பாவையாக ஆளுநரும் தமிழகத்தில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். இன்று  நூற்றுக்கும் மேற்பட்ட இளைஞர்கள் தற்கொலை செய்துக்கொண்ள்ளனர். கடந்த 20 நாட்களுக்கு முன்பு கூட கோவையில் வினோத்குமார் என்ற ஒரு இளைஞர் தனியார் விடுதியில் வங்கி கணக்கிலிருந்த முழு பணத்தை இழந்திருக்கிறார். கடன் வாங்கிய பணத்தை இழந்திருக்கிறேன் ரம்மியால் தற்கொலை செய்து கொண்டிருக்கிறேன் என்று கடிதம் எழுதி வைத்துவிட்டு இறந்திருக்கிறார். விருதுநகர் மாவட்டத்தில் சங்கர் என்ற இளைஞர் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். இந்த கொலைகள் குறித்து ஆளுநர் எந்த பதிலையும் சொல்லவில்லை. அரசும் எந்த பதிலையும் சொல்லவில்லை. எனவே இந்த கொலைகளுக்கு முழுமையாக காரனமான தமிழக ஆளுநர் வேண்டாம் என்ற குற்றச்சாட்டை தாங்கள் முன்வைக்கிறோம் என்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

இதையும் படிக்க : நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி கொள்ள பாஜகவினர் எதையும் செய்ய தயங்கமாட்டார்கள் - முதலமைச்சர்