ஜமேஷா முபின் உயிரிழப்பில் வெளியாகும்...அடுத்தடுத்த திடுக்கிடும் தகவல்கள்! விவரம் இதோ!

ஜமேஷா முபின் உயிரிழப்பில் வெளியாகும்...அடுத்தடுத்த திடுக்கிடும் தகவல்கள்! விவரம் இதோ!

கோவை கார் வெடிப்பு சம்பவத்தில் உயிரிழந்த ஜமேஷா முபின் குறித்து பல திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது.

ஜமேஷா முபின் குறித்த பல திடுக்கிடும் தகவல்:

கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று கோவை உக்கடத்தில் கார் வெடித்து சிதறிய விபத்தில், அதே பகுதியை சேர்ந்த ஜமேஷா முபின் என்பவர் உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து விசாரணை செய்ததில் அவரது வீட்டில் நாட்டு வெடிகுண்டு தயாரிப்பது அம்பலமானது. அதுமட்டுமல்லாமல், அவரிடம் 2019ஆம் ஆண்டு தேசிய புலனாய்வு விசாரணை நடத்தப்பட்டதாகவும் தகவல் வெளியானது. 

இதையும் படிக்க: கோவை: கார் வெடித்து விபத்து...வெளியான சிசிடிவி காட்சி...5 பேரை கைது செய்த போலீசார்...!

இந்த நிலையில் விபத்தில் உயிரிழந்த ஜமேஷா முபின் குறித்து பல திடுக்கிடும் தகவல் தற்போது வெளியாகியுள்ளது. ஏற்கெனவே இவர் தேசிய புலனாய்வு நடத்திய விசாரணையில் தொடர்புடையவர் என காவல்துறை தரப்பில் கூறப்பட்ட நிலையில்,  கடந்த 2020 ஆம் ஆண்டு தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட அம்ஜத் அலி என்பவரை கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டத்தில் உள்ள விய்யூர் மத்திய சிறைக்கு சென்று சந்தித்தது தெரியவந்துள்ளது. அவரை சந்திக்க சென்ற போது சிறைச்சாலையில் உள்ள பதிவேட்டில் கையெழுத்திட்டு இருப்பது மூலம் உறுதி செய்யப்பட்டது.

மேலும்  2019 ஆம் ஆண்டு இலங்கை தேவாலய குண்டு வெடிப்பு தொடர்பாக கைது செய்யப்பட்ட முகமது அசாருதீன் என்பவரை ஜமேஷா முபின் பார்க்க முற்பட்டதும் தெரிய வந்துள்ளது. தற்போது வெளியான இந்த தகவல்கள்,  உயிரிழந்த ஜமேஷா முபின் வழக்கில் அதிக பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.