கோவை: கார் வெடித்து விபத்து...வெளியான சிசிடிவி காட்சி...5 பேரை கைது செய்த போலீசார்...!

கோவை: கார் வெடித்து விபத்து...வெளியான சிசிடிவி காட்சி...5 பேரை கைது செய்த போலீசார்...!

கோவையில் காருக்குள் சிலிண்டர் வெடித்த விபத்தில் ஒருவர் உயிரிழந்த நிலையில், சம்பவம்  தொடர்பாக 5 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
 
உக்கடம் வெடி விபத்து:

கோவை உக்கடம் கோட்டைமேடு பகுதியில்,  கார் வெடித்து சிதறியதில், அதே பகுதியை சேர்ந்த ஜமேஷா முபின் என்பவர் உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். அதில் அந்த நபர் வீட்டில் கடந்த 2019-ம் ஆண்டு தேசிய பாதுகாப்பு முகமையினர் ஆய்வு நடத்தியதாகவும், தற்போது தனிப்படை நடத்திய சோதனையில் அவரது வீட்டில் நாட்டு வெடிகுண்டுகள் தயாரிக்கப்பட்டதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.  

சிசிடிவி காட்சிகள்:

மேலும், அவரது செல்போனை மீட்டுள்ள போலீசார், அவருடன் தொடர்பில் இருந்தவர்கள் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதற்கிடையில் தற்போது, ஜமேசா முபின் வீட்டில் இருந்து, மர்ம பொருள் கொண்டு செல்லும் சி.சி.டி.வி. காட்சிகள் வெளியாகியுள்ளன.

இதையும் படிக்க: இந்தி திணிப்புக்கு எதிரான தீர்மானத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தாக்கல்...

5 பேர் கைது:

இந்தநிலையில், சிலிண்டர் விபத்தில் உயிரிழந்த முபின் உடல் பிரேத பரிசோதனைக்கு பிறகு குடும்பத்தினருடன் ஒப்படைக்கப்பட்டு, போலீஸ் பாதுகாப்புடன் அடக்கம் செய்யப்பட்டுள்ளது. மேலும் அசம்பாவிதத்தை தடுக்கும் விதமாக  உக்கடம், கோட்டைமேடு பகுதியில் போலீஸ் மற்றும் துணை ராணுவம் குவிக்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில் சம்பவத்தில் தொடர்பு இருப்பதாக 5 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.