சசிகலா புஷ்பாவிற்கு பாலியல் தொந்தரவு..! பாஜக பிரமுகர் மீது புகார்..!

சசிகலா புஷ்பாவிற்கு பாலியல் தொந்தரவு..! பாஜக பிரமுகர் மீது புகார்..!

சசிகலா புஷ்பாவிற்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக பாஜக பிரமுகர் மீது பரமக்குடி நகர் காவல் நிலையத்தில் புகார்.

சசிகலா புஷ்பா அஞ்சலி:

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் கடந்த செப்டம்பர் மாதம் 11-ம் தேதி தியாகி இமானுவேல் சேகரனின் 65 ஆவது நினைவு நாள் அனுசகரிக்கப்பட்டது. இதில் பாஜக சார்பில் முன்னாள் எம்பி சசிகலா புஷ்பா கலந்து கொண்டு இமானுவேல் சேகரன் நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

வைரல் வீடியோ:

அப்போது  சசிகலா புஷ்பாவை, பாஜக மாநில பொதுச் செயலாளர் பொன்.பாலகணபதி பாலியல் தொந்தரவு செய்ததாக சமூக வலைதளங்களில் வீடியோ வைரலானது. இதையடுத்து பொன் பாலகணபதிக்கு பல்வேறு தரபபினர் கடும் கண்டனம் தெரிவித்தனர். பாஜக என்ற கட்சியின் உண்மை முகம் இது தான் எனவும் பெண்கள் அமைப்பினர் கொந்தளித்தனர். இது குறித்து தேசிய மகளிர் ஆணையம் பொன் பாலகணபதியை நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என நோட்டீஸ் அனுப்பியிருந்தது. 

இதையும் படிக்க: தமிழகத்தை கூறு போடும் திமுக...குற்றம் சாட்டும் அண்ணாமலை!

புகார்:

இந்த நிலையில், பாஜக பிரமுகர் பொன்பால கணபதி மீது நடவடிக்கை எடுக்க கோரி சசிகலா புஷ்பாவின் கணவர் ராமசாமி ஆன்லைன் மூலம் பரமக்குடி நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். 

சசிகலா புஷ்பாவின் கணவர் தூத்துக்குடி எஸ்பியிடம் ஏற்கனவே  புகார் அளித்த நிலையில் தொடர்ந்து பரமக்குடி நகர் காவல் நிலையத்திலும் ஆன்லைன் மூலம் புகார் அளித்திருக்கிறார்.இதற்கான ரசீது வலைதளங்களில் பரவி வருகிறது.