தமிழகத்தை கூறு போடும் திமுக...குற்றம் சாட்டும் அண்ணாமலை!

தமிழகத்தை கூறு போடும் திமுக...குற்றம் சாட்டும் அண்ணாமலை!

திமுக எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் தமிழகத்தை கூறு போட்டு வருவதாக மாநில பாஜக தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டி உள்ளார்.

கரூர் மாவட்ட பாரதிய ஜனதா கட்சி சார்பில் 100 காச நோயாளிகளுக்கு ஊட்டச்சத்து வழங்கும் விழாவினை பாரதிய ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை அவர்கள் துவக்கி வைத்து பேசினார்.

அப்போது பேசிய அவர், பாரதிய ஜனதா கட்சி நிர்வாகிகள் வீடுகளில் பெட்ரோல் குண்டு வீசியவர்கள் மீது தேசிய பாதுகாப்பு சட்டம் மற்றும் குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.  

இதையும் படிக்க: அசோக் கெலாட் தலைவர் தேர்தலில் இருந்து நீக்கமா? புதிய அழைப்பு யாருக்கு?

மேலும், இந்த விவகாரத்தில் தமிழக காவல் துறை உண்மை தன்மையுடன் செயல்பட வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார். 

தொடர்ந்து பேசிய அண்ணாமலை, தங்களுக்கு கமிஷன் வரவில்லை என ஆளுங்கட்சி எம்எல்ஏக்கள் தவித்து வருவதாகவும்,  திமுக எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் தமிழகத்தை கூறு போட்டு வருவதாகவும் அண்ணாமலை நிகழ்ச்சியில் குற்றம்சாட்டி பேசினார்.