"தமிழ்நாட்டில் சனாதனத்தை ஒழிக்க முடியாது" - அண்ணாமலை

ஆட்சிக்கு வந்து 30 மாதங்கள் ஆகியும் எந்த வாக்குறுதியையும் திமுக நிறைவேற்றவில்லை என பாஜக மாநில தலைவா் அண்ணாமலை விமா்சித்துள்ளாா். 

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் பாஜக மாநில தலைவா் அண்ணாமலை ’என் மண் என் மக்கள்’ நடைபயணம் மேற்கொண்டாா். அப்போது கட்சி நிா்வாகிகள் உற்சாக வரவேற்பு அளித்தனா். 

தொடா்ந்து பேசிய அவா், தமிழ்நாட்டில் சனாதனத்தை ஒழிக்க முடியாது என்பதற்கு திருச்செங்கோடு பவுர்ணமி கிரிவலமே சாட்சி எனவும், முதலமைச்சா் மு.க.ஸ்டாலினுக்கு விவசாயம் பற்றி எதுவும் தொியாது என்றாா்.

காங்கிரஸ் ஆட்சியில் 10 சதவீதமாக இருந்த வரா கடன் தற்போது 3 சதவீதமாக உள்ளது. முத்ரா கடன், சாலையோர வியாபாரி கடன் உள்ளிட்ட கடன்கள் வழங்கப்பட்டு வருவதாக குறிப்பிட்ட அண்ணாமலை, முதலமைச்சா் மு.க. ஸ்டாலின் மத்திய அரசு மீது பொய் குற்றச்சாட்டை வைத்து வருவதாக கூறினாா். 

இதையும் படிக்க : ஆம்னி பேருந்து கட்டணம் 5% குறைக்கப்படுவதாக அமைச்சர் அறிவிப்பு...!

ஆட்சிக்கு வந்து 30 மாதங்கள் ஆகியும் எந்த வாக்குறுதியையும் திமுக நிறைவேற்றவில்லை என விமா்சித்த அவா், பிரதமர் மோடி உலக நாடுகளில் 600 கோடி மக்களுக்கும் தமிழ் மொழியை எடுத்து செல்வதாக புகழாரம் சூட்டினாா்.

மேலும் பேசிய அண்ணாமலை, பிரதமா் மோடி மீது குற்ற சாட்டு வைக்க வேண்டும் என்றால் ஹிந்தியை திணிக்கிறாா் என கூறாமல், தமிழை உலக நாடுகளில் திணிக்கிறாா் என குற்றம் சாட்டுங்கள் என கூறினாா்.