"என்னை காவல்துறை கைது செய்யவுள்ளதாக கூறுவது வதந்தி" - சீமான்

"என்னை காவல்துறை கைது செய்யவுள்ளதாக கூறுவது வதந்தி" - சீமான்

காவல்துறையினர் தன்னைக் கைது செய்யவுள்ளதாக கூறுவது வதந்தி என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். 

நீலகிரி மாவட்டம் உதகையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தை முடித்துவிட்டு கோவை திரும்பிய சீமான் பீளமேடு பகுதியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், கடந்த 2011-ஆம் ஆண்டு புனையப்பட்ட நடிகை விஜயலட்சுமி வழக்கில் நான் சம்பந்தப்படவில்லை என அப்பெண்ணே எழுத்து பூர்வமாக அறிவித்துள்ளதாக தெரிவித்தார். 

இதையும் படிக்க : போட்டியின் இடையில் குறுக்கிட்ட மழை...பாகிஸ்தான் அணிக்கு அடித்த ஜாக்பார்ட்...இந்தியாவின் நிலை?

மேலும், தன்னை காவல்துறையினர் கைது செய்யப்படுவதாக கூறப்படுவது முற்றிலும் வதந்தி என்றும், தன்னை சட்டப்படி எதிர்த்தால் சட்டப்படி சந்திப்பேன், அரசியல் ரீதியாக எதிர்த்தால் அரசியல் ரீதியாக சந்திப்பேன் என கூறினார்.