போட்டியின் இடையில் குறுக்கிட்ட மழை...பாகிஸ்தான் அணிக்கு அடித்த ஜாக்பார்ட்...இந்தியாவின் நிலை?

போட்டியின் இடையில் குறுக்கிட்ட மழை...பாகிஸ்தான் அணிக்கு அடித்த ஜாக்பார்ட்...இந்தியாவின் நிலை?
Published on
Updated on
1 min read

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில், இந்தியா - பாகிஸ்தான் இடையிலான போட்டி மழையால் பாதியிலேயே ரத்து செய்யப்பட்டது.

16-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி பாகிஸ்தான் மற்றும் இலங்கையில் நடைபெற்று வருகிறது. தொடரின் 3-வது லீக் போட்டியில், பாகிஸ்தான் அணியை இந்தியா எதிா்கொண்டது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்டி முதலில் ஆட்டத்தை தொடங்கிய இந்திய அணி வீரா்கள் அடுத்தடுத்து சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்து வெளியேறினா்.

பின்னா் இஷான் கிஷன் , ஹர்திக் பாண்டியா ஜோடி நிதானமாக ஆடி ரன்களை குவித்து அரை சதம் அடித்து அசத்தினர். இறுதியில் 48 புள்ளி 5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 266 ரன்கள் எடுத்தது.

இதனையடுத்து 267 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் அணி களமிறங்க இருந்த நிலையில், மழை குறுக்கிட்டது. மழை தொடர்ந்து பெய்ததால் போட்டியை தொடர முடியாத நிலை ஏற்பட்டது. இதனால், போட்டி பாதியிலேயே ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்ட்டது. மேலும், இரு அணிகளுக்கு தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டது.

ஏற்கனவே முதல் போட்டியில் நேபாளம் அணியை வீழ்த்தியதால் பாகிஸ்தான் அணி சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெற்றது. இதன் காரணமாக நாளை நடைபெறவுள்ள நேபாளம் அணிக்கு எதிரான போட்டியில், வெற்றி பெற வேண்டிய கட்டாயம் இந்திய அணிக்கு ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com