சே குவேரா பற்றி அனைவருக்கும் தெரிந்திருக்கும். கியூபாவில், மக்களுக்காக போராடிய சே குவேரா, தனது புரட்சிக்காகவே உலகம் முழுவதும் அறியப்படுகிறார். அவரது மகள் அலெய்டா குவேரா இந்தியாவில் ஒரு சுற்றுலா பயணம் மேற்கொண்டு வருகிறார்.
கடந்த ஜனவரி 17ம் தேதி விமானம் மூலம் அலெய்டா சே குவேரா விமானம் மூலம், கேரளாவில் இருந்து சென்னை வந்தடைந்தார். அனைத்து இந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் அகில இந்திய மாநாட்டில் பங்கேற்க திருவனந்தபுரம் வந்த அவர், சென்னைக்கு வந்து ராஜா அண்ணாமலை மன்றத்தில் நடந்த வரவேற்பு நிகழ்சியில் கலந்து கொண்டார்.
மேலும் படிக்க | இலவச பயிற்சி வகுப்பைத் தொடங்கி வைத்தார் உதயநிதி ஸ்டாலின்!!!
தமிழ்நாட்டின் மாக்சிஸ்ட் கமியூனிஸ்ட் கட்சி நடத்திய இந்த நிகழ்ச்சிக்கு, தனது மகள் எஸ்டெஃபானி குவேராவுடன் கலந்து கொண்ட நிலையில், பத்திரிக்கையாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர்,
“சில விஷயங்களுக்கு நன்றி சொல்ல முடியாது சில விஷயங்களுக்கு வார்த்தை இல்லை. மிகப்பெரிய அன்பை நான் பார்த்ததில்லை. மரபு வழியாக தான் இதை கருதுகிறேன். எங்கள் நாட்டு மக்களின் மகளாக இருப்பதற்கு பெருமைப்படுகிறேன். அங்கோலியாவில் குழந்தை மருத்துவராக இருந்த காலத்தில் நல்ல மனிதராக இருந்தேன். அங்கோலியா மக்களுக்கு என் கையில் சிகிச்சை பார்த்தது பெருமையாக இருந்தது.
ஒரு மனிதனின் மகளாக இருப்பது பெருமை இல்லை இது போன்ற சேவைகளை செய்ததே எனக்கு பெருமை. உங்கள் அன்பினை என் நாட்டு மக்களுக்கும் மருத்துவர்களுக்கும் எடுத்து சொல்வேன். இந்த நாட்டின் மிகப்பெரிய தலைவர் நல்லகண்ணு தற்போது என்னுடன் இருப்பது பெருமையாக இருக்கிறது.
சாதாரண மக்களுக்கு உழைக்கக்கூடிய சேவை செய்யக்கூடிய நல்ல மனிதர். மிகச் சிறந்த நாளாக இதை கருதுகிறேன். இன்று என் தந்தை மீது நீங்கள் காட்டப்பட்ட அன்பை நான் உணர்கிறேன்.
சேகுவாரா மகள் என்ற முறையில் உங்கள் அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். நாம் இதுபோன்ற மக்கள் சக்தியோடு இணைந்து தொடர்ந்து வெற்றி பெறும் வரை போராடி கொண்டே இருக்க வேண்டும்.
என கூறி முடித்தது குறிப்பிடத்தக்கது.