இலவச பயிற்சி வகுப்பைத் தொடங்கி வைத்தார் உதயநிதி ஸ்டாலின்!!!

இலவச பயிற்சி வகுப்பைத் தொடங்கி வைத்தார் உதயநிதி ஸ்டாலின்!!!

தமிழ்நாட்டை சேர்ந்த 2  சதவீதம் பேர் மட்டுமே மத்திய அரசு தேர்வில் தேர்ச்சி பெறுவது வருத்தமளிப்பதாக இளைஞர் நலன் மற்றும் விளையாடுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னை, சேப்பாக்கத்தில்  உள்ள மாநில கல்லூரியில் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறையின் கீழ் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை சார்பில் போட்டித் தேர்வர்களுக்கான இலவச பயிற்சி வகுப்புகளை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் சி.வி.கணேசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 

இதனைதொடர்ந்து பேசிய அமைச்சர் உதயநிதி, கல்வியை அனைத்து தரப்பினருக்கும் எடுத்து சென்று அனைவரையும் உயர்ந்த நிலைக்கு கொண்டு செல்வதே திராவிட மாடலின் ஒரே இலக்கு என்று கூறியுள்ளார்.  மேலும், டி.என்.பி. எஸ்.சி, வங்கி தேர்வு, மத்திய அரசின் தேர்வுகள் என அனைத்து வகையான தேர்வுகளையும் எதிர்கொள்ளும் வகையில், மாணவர்கள் இந்த இலவச பயிற்சி வகுப்பு மூலம் பயன் பெறுவார்கள் என்றும் தெரிவித்துள்ளார். 

-நப்பசலையார்

இதையும் படிக்க:  சாதனை படைத்த சென்னை மெட்ரோ ரயில்....!!!