குடியரசு தின அணிவகுப்பு பயிற்சியில்...ஆளுநர், முதலமைச்சர் வருவது போல நடந்த ஒத்திகை!

குடியரசு தின அணிவகுப்பு பயிற்சியில்...ஆளுநர், முதலமைச்சர் வருவது போல நடந்த ஒத்திகை!

நாடு முழுவதும் குடியரசு தின விழா வருகின்ற 26ஆம் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில், சென்னை காமராஜர் சாலையில் 2 ஆம் நாள் குடியரசு தின அணிவகுப்பு ஒத்திகை நடைபெற்றது.

குடியரசு தின விழா:

ஆண்டுதோறும் குடியரசு தின விழா காந்தி சிலை அருகே நடைபெறுவது வழக்கம். ஆனால், இந்த ஆண்டு அப்பகுதியில் மெட்ரோ பணிகள் நடைபெறுவதால் வருகின்ற 26 ஆம் தேதி குடியரசு தின விழா உழைப்பாளர் சிலை அருகே நடைபெறவுள்ளது. 

இதையும் படிக்க : 46வது புத்தக கண்காட்சியின் நிறைவு விழா...பாராட்டுச் சான்றிதழ்களை பெறப்போவது யார்?

ஒத்திகை நிகழ்ச்சி :

அதன்படி, நாடு முழுவதும் குடியரசு தின விழா வருகின்ற 26ஆம் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில், சென்னை காமராஜர் சாலையில் இன்று முதல் வரும் 24 ஆம் தேதி வரை குடியரசு தின அணிவகுப்பு ஒத்திகை நடைபெற உள்ளது. அந்த வகையில், உழைப்பாளர் சிலை அருகே 2ஆம் நாள் குடியரசு தின அணிவகுப்பு ஒத்திகை நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. 

முப்படை வீரர்கள் பங்கேற்பு :

இந்த ஒத்திகை நிகழ்ச்சியில் முப்படைவீரர்கள் , காவல் துறையினர் உள்ளிட்டோர் திரளாக பங்கேற்றனர். அப்போது ஆளுநர், முதலமைச்சர் உள்ளிட்டோர் வருவதுபோலவும், அவர்களுக்கு மரியாதை செலுத்துவது போலவும் ஒத்திகை நடந்ததோடு, மாணவர்களின் கலைநிகழ்ச்சிகளும் நடைபெற்றன.