ஒலி மாசற்ற தீபாவளியை கொண்டாட வேண்டும் - மாசு கட்டுப்பாட்டு வாரியம் அறிக்கை வெளியீடு!

ஒலி மாசற்ற தீபாவளியை கொண்டாட வேண்டும் - மாசு கட்டுப்பாட்டு வாரியம் அறிக்கை வெளியீடு!

ஒலி மாசற்ற தீபாவளியை பொதுமக்கள் கொண்டாட வேண்டும் என்று மாசு கட்டுப்பாட்டு வாரியம் கேட்டுக் கொண்டுள்ளது. 

மாசு கட்டுப்பாட்டு வாரியம் அறிக்கை:

தீபாவளியை முன்னிட்டு மாசு கட்டுப்பாட்டு வாரியம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில், குறைந்த அளவில் காற்று மாசுபடுத்தும் தன்மை கொண்ட பசுமை பட்டாசுகளை மட்டுமே வெடிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதேபோன்று, அதிக ஒலி எழுப்பும் மற்றும் தொடர்ச்சியாக வெடிக்கக் கூடிய சரவெடிகளை தவிர்க்கவேண்டும் எனவும், மருத்துவமனைகள், வழிபாட்டு தலங்கள் மற்றும் அமைதியான இடங்களில் பட்டாசு வெடிக்கக்கூடாது எனவும் கூறப்பட்டுள்ளது.

இதையும் படிக்க: ஸ்டாலின் விரித்த வலையில் வசமாக சிக்கிய ஈபிஎஸ்...எப்படி தப்ப போகிறார்?

மேலும், குடிசை பகுதிகள் மற்றும் எளிதில் தீப்பற்ற கூடிய இடங்களுக்கு அருகில் பட்டாசு வெடிக்க வேண்டாம் என்றும், அரசு அனுமதித்துள்ள நேரத்தில் மற்றும் உரிய இடங்களில் மட்டுமே பட்டாசுகளை வெடித்து மாசற்ற தீபாவளியை கொண்டாட வேண்டும் எனவும் மாசுக்கட்டுப்பாடு வாரியம் கேட்டுக்கொண்டுள்ளது.