”பிரதமா் மோடி பதவி விலக வேண்டும்” - ஈவிகேஎஸ் கண்டனம்!

”பிரதமா் மோடி பதவி விலக வேண்டும்” - ஈவிகேஎஸ் கண்டனம்!

ஒடிசா ரயில் விபத்திற்கு பொறுப்பேற்று பிரதமர் மோடி பதவி விலக வேண்டும் என தமிழ்நாடு காங்கிரஸ் முன்னாள் தலைவா் ஈவிகேஎஸ் இளங்கோவன் கருத்து தொிவித்துள்ளாா்.

ஈரோட்டில் நகர்ப்புற நலவாழ்வு மைய திறப்பு விழாவில் பங்கேற்ற தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் மற்றும் ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினர்  இளங்கோவன், செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ஒடிசாவில் நடந்த ரயில் விபத்துக்கு பொறுப்பேற்று மத்திய ரயில்வே அமைச்சர் ராஜினாமா செய்ய வேண்டும் என பலரும் வலியுறுத்துகின்றனர். ஆனால், என்னை பொறுத்தவரை பிரதமரே ராஜினாமா செய்ய வேண்டும் என இளங்கோவன் கூறினார்.

இதையும் படிக்க : விழுப்புரத்தில் பரபரப்பு: இரு பிரிவினரிடையே மோதல்...கோயிலுக்கு சீல் வைத்து 144 தடை விதித்த அதிகாரிகள்!

தொடர்ந்து பேசிய அவர், மேகதாதுவில் அணை கட்டப்படும் என கர்நாடகா துணை முதல்வர் சிவகுமார் சுட்டிக்காட்டியவர், சிவகுமாருக்கு தகுந்த பதிலை துரைமுருகன் தெரிவித்துள்ளதாகவும், மேகதாதுவில் அணை கட்டுவதை தமிழ்நாடு காங்கிரஸ் ஒரு போதும் ஏற்காது எனவும் திட்டவட்டமாக தொிவித்துள்ளாா்.