விழுப்புரத்தில் பரபரப்பு: இரு பிரிவினரிடையே மோதல்...கோயிலுக்கு சீல் வைத்து 144 தடை விதித்த அதிகாரிகள்!

விழுப்புரத்தில் பரபரப்பு: இரு பிரிவினரிடையே மோதல்...கோயிலுக்கு சீல் வைத்து 144 தடை விதித்த அதிகாரிகள்!

Published on

விழுப்புரம் மாவட்டம் மேல்பாதி பகுதியிலுள்ள திரெளபதி அம்மன் கோயிலில் குறிப்பிட்ட சமுதாயத்தினருக்கு அனுமதி மறுக்கப்பட்ட விவகாரத்தில் கோயிலை அதிகாரிகள் பூட்டி சீல் வைத்தனர்.  

விழுப்புரத்தில் மேல்பாதி கிராமத்தில் திரெளபதி அம்மன் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் நடைப்பெற்ற திருவிழாவின் போது குறிப்பிட்ட பிரிவினரை கோயிலுக்குள் அனுமதிக்கக்கூடாது என மற்றோரு தரப்பினர் தெரிவித்தனர். இதனால் இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டதையடுத்து அங்கு பரபரப்பு நிலவியது.

இதையடுத்து சம்பவம் குறித்து மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் நடத்திய பேச்சு வார்த்தை தோல்வியுற்றதை தொடர்ந்து, கோயிலை பூட்டி சீல் வைக்கும்படி கோட்டாசியர் உத்தரவிட்டார். இந்த உத்தரவின் பேரில் வருவாய்துறையினர் கோயிலை பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சீல் வைத்தனர்.

தொடர்ந்து, வடக்கு மண்டல ஐஜி தலைமையில் அப்பகுதி முழுக்க 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் குவிக்கப்பட்டுள்ளனர். மேலும் கிராமம் முழுவதையும் போலீசாரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பதற்றமான சூழல் நிலவி வரும் நிலையில், கோலியனூர் கூட்ரோடு வழியாக வரும் வாகனங்கள் விழுப்புரம், முண்டியம்பாக்கம் வழியாக திருப்பி விடப்பட்டுள்ளது.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com