பட்ஜெட் மீதான விவாதத்திற்கு பிடிஆர் பதில் உரை...!

பட்ஜெட் மீதான விவாதத்திற்கு பிடிஆர் பதில் உரை...!

அதிமுக ஆட்சியில் செயல்படுத்திய திட்டங்களை கைவிடாமல் மாற்றி அமைத்து திமுக அரசு செயல்படுத்தி வருவதாக நிதித்துறை அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.

சட்டப்பேரவையில் பட்ஜெட் மீதான பொது விவாதத்திற்கு பதில் உரை அளித்த நிதித்துறை அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன், அதிமுக ஆட்சியில் செயல்படுத்திய திட்டங்களை திமுக அரசு கைவிட்டுவிட்டதாக தவறான தகல்களை பரப்பி வருவதாவும், திட்டங்களை மாற்றி அமைத்து செயல்படுத்துவதாகவும் கூறினார்.

தாலிக்கு தங்கம் திட்டம் 4 வருடங்களாக செயல்படுத்தப்படாமல் நிலுவையில் இருந்த நிலையில், இத்திட்டத்தை புதுமைப்பெண் திட்டமாக மாற்றி திமுக அரசு அறிவித்துள்ளதாக கூறினார். மேலும் சிறு குறு நடுத்தர தொழில் நிறுவனங்களை ஊக்குவிக்கும் விதமாக மின்சார பயன்பாடு அதிகம் உள்ள நேரத்தில் 25 சதவீதத்தில் இருந்து 15 சதவீதமாக கட்டணம் குறைக்கப்பட்டு இருப்பதை அமைச்சர் சுட்டிக்காட்டினார். 

இதையும் படிக்க : அதிமுக பொதுக்குழு வழக்கு: ஈபிஎஸ்க்கு ஆதரவாக அமைந்த தீர்ப்பு...ஓபிஎஸ்ஸின் அடுத்தக்கட்ட மூவ் என்ன?

அதனை தொடர்ந்து பேசிய அமைச்சர் பிடிஆர். பழனிவேல் தியாகராஜன், மற்ற மாநிலங்களை ஒப்பிடும் போது தமிழ்நாட்டின் வருவாய் மற்றும் நிதி பற்றாக்குறை  குறைவாகவே உள்ளதாகவும் கடனை அதிகமாக வாங்கி திட்டத்தை செயல்படுத்தினால் அது சமூக நீதிக்கு  எதிரானது எனவும் கூறினார். 

இயற்றும் ஈட்டலும் என்ற அடிப்படையை முதன்மையாக வைத்து முதலீடுகளை ஈர்ப்பது , புதிய நிறுவனங்களை செயல்பாட்டுக்கு கொண்டு வந்து,  புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்குவது போன்ற திட்டங்களை அளிக்க வேண்டும் என்ற முனைப்பில் இருப்பதாவும், அதற்கு அனைவரும் ஒத்துழைத்து தர வேண்டும் என்று நிதி அமைச்சர் வேண்டுகோள் விடுத்தார்.