2021ல் 700 இடங்கள்...ஆனால் 2022ல் வெறும் 40 இடங்கள் தான்...அமைச்சர் மா.சுப்பிரமணியம் பேச்சு!

2021ல் 700 இடங்கள்...ஆனால் 2022ல் வெறும் 40 இடங்கள் தான்...அமைச்சர் மா.சுப்பிரமணியம் பேச்சு!

சென்னையில் அதிக அளவில் மழை பொழிந்த நிலையிலும் மிகக் குறைந்த அளவே பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.

வடகிழக்கு பருவமழையால் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளநீர்:

வடகிழக்கு பருவமழைத் தொடங்கியது முதலே தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தொடர் மழை பெய்து வருகிறது. சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள மாவட்டங்களில் இரு தினங்களாக தொடர் மழை பெய்து வருகிறது. கனமழையால், சென்னையின் பல்வேறு இடங்களில் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.

இதையும் படிக்க: இனி ராஜராஜ சோழனின் பிறந்த நாளும் அரசு விழா தான்...!

ஆய்வு மேற்கொண்ட அதிகாரிகள்:

இந்நிலையில், சென்னை விருகம்பாக்கம் பகுதியில் நடைபெறும் மழைநீர் வடிகால் பணிகள் குறித்து அமைச்சர் மா.சுப்பிரமணியம்  மற்றும் மாநகராட்சி ஆணையர் சுகன் தீப் சிங் பேடி ஆகியோர் நேரில் ஆய்வு செய்தனர். தொடர்ந்து, கே. கே.நகர் காவல் நிலையம் முன்பு தண்ணீர் தேங்குவது குறித்தும் ஆய்வு மேற்கொண்டதோடு, காவல் நிலையத்திற்குள் தண்ணீர் ஒழுகுவது குறித்தும் கேட்டறிந்தார்.

40 இடங்களில் மட்டுமே மழை நீர் தேங்கியுள்ளது:

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்து அமைச்சர் மா.சுப்பிரமணியம் பேசினார். அப்போது பேசிய அவர்,  2 ஆண்டுகாலம் நடைபெற்று இருக்க வேண்டிய இந்த மழை நீர் வடிகால் பணிகள் முதமைச்சர் மு.க.ஸ்டாலினின் தொடர்ச்சியான முயற்சியால் 6 மாதங்களில் முடிந்துள்ளதாகவும், வெறும் 400 மோட்டார் மட்டுமே பயன்படுத்தும் அளவுக்கு தற்போது நிலை மாறியுள்ளதாகவும் தெரிவித்தார். தொடர்ந்து, கடந்த ஆண்டு பருவமழையின் போது 700 இடங்களில் மழை நீர் தேங்கிய நிலையில் தற்போது 40 இடங்களில் மட்டுமே மழை நீர் தேங்கியுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியம் தெரிவித்தார்.