இனி ராஜராஜ சோழனின் பிறந்த நாளும் அரசு விழா தான்...!

இனி ராஜராஜ சோழனின் பிறந்த நாளும் அரசு விழா தான்...!
Published on
Updated on
1 min read

மாமன்னன் ராஜராஜ சோழன் பிறந்த நாள் விழா இனி அரசு விழாவாகக் கொண்டாடப்படும் என்று தமிழ்நாடு முதலைமைச்சர் மு க ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

சதய விழாவாக கொண்டாடப்படும் ராஜராஜ சோழனின் பிறந்தநாள்:

உலகப் புகழ்பெற்ற தஞ்சை பெரிய கோவிலை கட்டிய மாமன்னன் ராஜராஜ சோழனின் பிறந்த நாளான நவம்பர் 3 ஆம் தேதியை, சதய விழாவாக ஆண்டுதோறும் பல்வேறு அமைப்புகளால் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி, இந்த ஆண்டும் நவம்பர் 3 ஆம் தேதியான இன்று  1037 வது சதய விழா தொடங்கி கொண்டாடப்பட்டு வருகிறது.

அரசு விழாவாக அறிவித்தார் முதலமைச்சர்:

இந்நிலையில் மாமன்னர் ராஜராஜசோழனின் பிறந்த நாளை அரசு விழாவாக அறிவிக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பிலிருந்தும் கோரிக்கைகள் வைக்கப்பட்டது. இதனை ஏற்று இனி வரும் ஆண்டுகளில் ராஜராஜ சோழனின் பிறந்த நாள் அரசு விழாவாக கொண்டாடப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

ராஜராஜ சோழன் மணிமண்டபம் பொலிவூட்டப்படும்:

இது தொடர்பாக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், மாமன்னர் சோழனின் பிறந்த நாளை அரசு விழாவாக அறிவிக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பிலிருந்து வந்த கோரிக்கைகளை ஏற்று இனிவரும் ஆண்டுகளில் மாமன்னர் ராஜராஜ சோழனின் பிறந்த நாளினை அரசு விழாவாக கொண்டாடப்படும். ​மேலும், தஞ்சாவூரிலுள்ள மாமன்னர் ராஜராஜ சோழன் மணிமண்டபம் மேம்படுத்தி பொலிவூட்டப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com