அய்யோ இனி கோயில்ல செல்ஃபி எடுக்க முடியாதா...நீதிமன்றம் உத்தரவு என்ன?!!!

அய்யோ இனி கோயில்ல செல்ஃபி எடுக்க முடியாதா...நீதிமன்றம் உத்தரவு என்ன?!!!

தமிழ்நாட்டில் உள்ள கோயில்களில் புனிதம் மற்றும் பாதுகாப்பை காரணம் காட்டி செல்போன் பயன்படுத்த தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

நீதிமன்ற கோரிக்கை:

தூத்துக்குடி மாவட்டத்தில் தற்போதுள்ள அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவில் வளாகத்தில் செல்போன்களை தடை செய்ய உரிய நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட துறை மற்றும் உரிய அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும் என மனுதாரர் எம்.சீதாராமன் நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்திருந்தார். 

மனுவில் கூறப்பட்டவை:

மனுதாரரின் கோரிக்கை என்னவென்றால், அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவில் ஒரு பழங்கால சமய ஸ்தலமாகும் எனவும் அங்கு அமைதியான முறையில் இலவச தரிசனத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எனவும் கூறியுள்ளார்.  ஆனால் தீபாராதனை, பூஜை மற்றும் பிற சடங்குகளின் போது வீடியோ எடுப்பதற்கும் புகைப்படம் எடுப்பதற்கும் கேமராவைப் பயன்படுத்துவது வழிபாட்டைப் பாதிக்கிறது எனத் தெரிவித்துள்ளார்.

மேலும், முருகப்பெருமானின் ஆறு அதிஷ்டானங்களில் இக்கோயிலும் ஒன்று எனவும் ஆகம விதிகளின்படி, சிலைகளை படம் எடுப்பது நெறிமுறையற்றது எனவும் கூறியுள்ள மனுதாரர் இதுதவிர கோவிலின் பாதுகாப்பு மற்றும் அதில் உள்ள மதிப்பு மிக்க பொருட்களும் ஆபத்தில் உள்ளன எனவும் தெரிவித்துள்ளார்.

நீதிமன்ற உத்தரவு:

அரசியல் சாசனத்தின் 25வது பிரிவின் கீழ், அனைத்து மக்களுக்கும் சுதந்திரமாக மதத்தை பின்பற்றுவதற்கும், பிரச்சாரம் செய்வதற்கும் உரிமை வழங்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்த நீதிபதிகள் அமர்வு இந்த உரிமையைப் பயன்படுத்துவதற்கான இடமாக கோயிலும் இருக்கலாம் ஆனால் கோயில் வளாகங்கள் சில விதிகளைக் கொண்டிருக்கிறது எனவும் தெரிவித்துள்ளது.  

தொடர்ந்து இது மத சுதந்திரத்தில் தலையிடுவது அல்ல எனவும் தமிழ்நாடு கோயில் நுழைவு ஆணையச் சட்டம், 1947, கோயிலில் ஒழுக்கத்தை பேண சில விதிமுறைகள் உருவாக்கப்பட வேண்டும் எனக் கூறியுள்ளது.  எனவே, செல்போன் தடையை கடிதம் மூலம் அமல்படுத்தலாம் என உத்தரவிட்டது சென்னை உயர்நீதிமன்றம்.

-நப்பசலையார்

இதையும் படிக்க:  செய்றதலாம் செஞ்சுட்டு...பதறிய முதலமைச்சர்...நடந்தது என்ன?!!