செய்றதலாம் செஞ்சுட்டு...பதறிய முதலமைச்சர்...நடந்தது என்ன?!!

செய்றதலாம் செஞ்சுட்டு...பதறிய முதலமைச்சர்...நடந்தது என்ன?!!
Published on
Updated on
1 min read

மாநிலத்தில் சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்தவர்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்படுவதாக எழுந்த குற்றச்சாட்டு.

தேர்தல் ஆணையத்திற்கு கோரிக்கை:

கர்நாடகாவின் கிரேட்டர் பெங்களூரு மகாநகர பலிகே (பிபிஎம்பி) பகுதியில் தனியார் அமைப்பினர் வாக்காளர்களை மோசடி செய்த விவகாரத்தில், அங்கீகரிக்கப்படாத வாக்காளர்களின் பெயர்களை தேர்தல் ஆணையம் நீக்கிவிட்டு உண்மையான வாக்காளர்களின் பெயர்களை சேர்க்க வேண்டும் என்று முதலமைச்சர் பசவராஜ் பொம்மை கூறியுள்ளார்.   

குற்றத்தை மறைக்கவே:

அதே நேரத்தில், மாநிலத்தில் சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்தவர்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்படுவதாக எழுந்த குற்றச்சாட்டையும் முதலமைச்சர் நிராகரித்துள்ளார்.  அவர் மீதான குற்றச்சாட்டை மறைக்கவே தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்டதாக அரசியல் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.

விஷயம் என்ன:

இந்த விவகாரமானது கர்நாடக மாநிலத்தின் 162 சிவாஜிநகர், 169 சிக்பெட் மற்றும் 174 மகாதேவ்புரா ஆகிய மூன்று சட்டமன்றத் தொகுதிகளுடன் தொடர்புடையது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.  இந்த மூன்று சட்டசபை தொகுதிகளும் பிபிஎம்பி பகுதிக்கு உட்பட்டவை.  

இந்த சட்டசபை தொகுதிகளின் வாக்காளர் பட்டியலில் தனி நபர்களால் வாக்காளர்களின் பெயர்களை இணைத்தல், நீக்கல் போன்ற தவறான செயல்கள் நடந்துள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது.  இந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுத்து, 100 சதவீத விசாரணை நடத்த இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

-நப்பசலையார்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com