விழிப்புணர்வுக் கூட்டத்தில் காவல்துறை அதிகாரிகளுடன் செல்ஃபி எடுத்து மகிழ்ந்த North Indians...!

விழிப்புணர்வுக் கூட்டத்தில் காவல்துறை அதிகாரிகளுடன் செல்ஃபி எடுத்து மகிழ்ந்த North Indians...!
Published on
Updated on
1 min read

திண்டிவனத்தில் நடைபெற்ற வட மாநில தொழிலாளர்கள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வுக் கூட்டத்தில் காவல்துறை அதிகாரிகளுடன் செல்பி எடுத்துக்கொண்டு வட மாநில இளைஞர்கள் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

தமிழகத்தில் வட மாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவது போன்ற வீடியோ ஒன்று சித்தரிக்கப்பட்டு தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இந்த வீடியோ தமிழ்நாட்சில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அதுமட்டுமல்லாமல், அன்றைய தினம் வீடியோ ஒருபக்கம் வைரலாகி வந்த நிலையில், மறுபுறம் வட மாநில தொழிலாளர்கள் தங்களது சொந்த ஊருக்கு செல்வதற்காக படையெடுத்தனர். இந்த நிகழ்வு இன்னும் அதிகமாகவும் பரபரப்பாகவும் பேசப்பட்டது. ஆனால், இதற்கு விளக்கம் கொடுத்த தமிழக காவல்துறை, இது முற்றிலும் பொய்யான செய்தி, வட மாநில இளைஞர்கள் இங்கு பாதுகாப்பாக இருப்பதாகவும் விளக்கம் அளிக்கப்பட்டது.

இந்நிலையில் திண்டிவனத்தில் வட மாநில தொழிலாளர்கள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு கூட்டம் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. திண்டிவனம் காவல் ஆய்வாளர் கலைச்செல்வி தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், வட மாநில தொழிலாளர்கள் பாதுகாப்பு குறித்து விளக்கி கூறப்பட்டது. மேலும் தொழிலாளர்களுக்கு ஏதேனும் பிரச்னைகள் இருந்தால் தயங்காமல் காவல்துறையில் புகார் அளிக்குமாறும் அறிவுறுத்தப்பட்டது.

அப்போது நமது பகுதியில் வட மாநில தொழிலாளர்களுக்கு எந்த பிரச்சினையும் இல்லாத நிலையில், உங்களது வீடுகளுக்கும் உறவினர்களுக்கும் இது குறித்து தகவல் தெரிவிக்க வேண்டும் என்று காவல்துறையின் சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டது. இதையடுத்து வடமாநில தொழிலாளர்கள் தாங்கள் சந்தோசமாக இருப்பதாகவும், எந்தவிதமான பிரச்சனையும் எங்களுக்கு இந்த பகுதியில் இல்லை என்றும், பாதுகாப்பாக பணியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறோம் என்றும் தங்களது கருத்துக்களை தெரிவித்தனர்.

இதன் பின்பு காவல்துறை அதிகாரிகளுடன் வட மாநில தொழிலாளர்கள் செல்பி 
எடுத்து தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். இந்நிகழ்ச்சியில், காவல் உதவி ஆய்வாளர் பாக்கியலட்சுமி, வழக்கறிஞர் ரமணன் மற்றும் ரைஸ் மில் உரிமையாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com