வெடி விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு முதலமைச்சர் நிவாரணம் அறிவிப்பு!

வெடி விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு முதலமைச்சர் நிவாரணம் அறிவிப்பு!

கடலூர் பட்டாசு ஆலை வெடிவிபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிவாரணம் அறிவித்துள்ளார். 

கடலூரில் ஏற்பட்ட பட்டாசு ஆலை வெடிவிபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு நிவாரணம் அளித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செய்திக்குறிப்பு வெளியிட்டுள்ளார். இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், கடலூர் மாவட்டம் மற்றும் மதலப்பட்டு மதுரா, சிவனார்புரம் கிராமத்தில் இயங்கிவந்த பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் மல்லிகா என்பவர் உயிரிழந்தார் என்ற செய்தியினைக் கேட்டு மிகுந்த வேதனை அடைந்ததாக தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க : நிறைவேற்றப்படாத 27% வாக்குறுதிகள் விரைவில் நிறைவேற்றப்படும்...முதலமைச்சர் உறுதி!

இவ்விபத்தில் கடுமையான மற்றும் லேசான தீக்காயங்களுடன் சிகிச்சை பெற்று வரும் 5 பேருக்கு சிறப்பான சிகிச்சை அளிக்க அறிவுறுத்தியுள்ளதாக குறிப்பிட்டுள்ள முதலமைச்சர், உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கும் அவரது உறவினர்களுக்கும் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார்.

மேலும் உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு 3 லட்சம் ரூபாயும், காயமடைந்தவர்களுக்கு தலா ஐம்பதாயிரம் ரூபாயும் நிவாரணமாக வழங்க  முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.