33 சதவீதத்திற்கு மேல் பாதிப்பு இருந்தால் இழப்பீடு குறித்து ஆலோசிக்கப்படும் - அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்!

33 சதவீதத்திற்கு மேல் பாதிப்பு இருந்தால் இழப்பீடு குறித்து ஆலோசிக்கப்படும் - அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்!

மயிலாடுதுறையில் மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களை ஆய்வு செய்த வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், 7 மாவட்டங்களில் ஒரு லட்சத்து 27 ஆயிரம் ஹெக்டேர் நெற்பயிர்கள் பாதிக்கப்பட்டதாக தெரிவித்தார்.

மழையால் பாதிப்படைந்த பயிர்களை ஆய்வு செய்த அமைச்சர் :

டெல்டா மாவட்டங்களில்  கடந்த 5 நாட்களாக பெய்த தொடர்மழையால், 34 ஆயிரம் ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த நெற்பயிர்கள் வேறோடு சாய்ந்து சேதமடைந்தன. உளுந்து மற்றும் பயறு வகை பயிர்களில் சுமார் 38 ஆயிரம் ஏக்கர் பயிர்கள் முழுமையாக நீரால் சூழப்பட்டுள்ளன. 

இதையும் படிக்க : இன்று 7 மணிக்குள் சமர்பிக்க உத்தரவு... ஆனால் ஓபிஎஸ் கேட்ட கேள்வி...அப்போ அதிமுக வேட்பாளர் யார்?

இந்நிலையில் சேதமடைந்த பயிர்களை ஆய்வு செய்த அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், மொத்தம் 7 மாவட்டங்களில் ஒரு லட்சத்து 27 ஆயிரம் ஹெக்டேர் நெற்பயிர்கள் பாதிக்கப்பட்டதாக தெரிவித்தார். மேலும், 33 சதவீதத்திற்கு மேல் பாதிப்பு இருந்தால் இழப்பீடு குறித்து ஆலோசிக்கப்படும் என தெரிவித்தார். 

இதேபோல் திருவாரூரில் ராயநல்லூர், கிரக்கலூர் உள்ளிட்ட பகுதிகளில் மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களை உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி நேரில் ஆய்வு செய்தார். முன்னதாக தஞ்சையில், அம்மாப்பேட்டை, உக்கடை உள்ளிட்ட கிராமங்களில், அவர் ஆய்வில் ஈடுபட்டு விவசாயிகளிடம் குறைகளை கேட்டறிந்தது குறிப்பிடத்தக்கது.