ஈவிகேஎஸ் மட்டுமல்ல...நானும் தான் பெரியாரின் பேரன்...பரப்புரை செய்த கமல்!

ஈவிகேஎஸ் மட்டுமல்ல...நானும் தான் பெரியாரின் பேரன்...பரப்புரை செய்த கமல்!

ஈவிகேஎஸ் இளங்கோவன் மட்டுமல்ல நானும் பெரியாரின் பேரன் தான் என்று மக்கள் நீதி மைய தலைவர் கமல்ஹாசன் கூறியுள்ளார்.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக கூட்டணி சார்பாக போட்டியிடும் காங்கிரஸ் கட்சியின் ஈவிகேஎஸ் இளங்கோவனை ஆதரித்து கருங்கல்பாளையம் காந்தி சாலையில் திறந்த வேனில் பரப்புரை மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், ஜனநாயகத்தின் வழியாகவும் சர்வாதிகாரம் ஆட்கொள்ள முடியும் என்பதற்கு பல சான்றுகள் உலகத்தில் உள்ளதாகக் கூறினார்.

இதையும் படிக்க : முதலமைச்சரின் அடுத்த சுற்றுப்பயணம் இங்க தான்...2 நாள் பயணத்தின் முக்கிய அறிவிப்பு!

சின்னம், கட்சி, கொடி என எல்லாவற்றையும் தாண்டியதே தேசம் என்றும், அந்த தேசத்தைக் காக்க அறத்துடன் கைகோர்த்துள்ளதாகவும் கூறினார். தான் அரசியலுக்கு வந்தது எவ்வித லாபத்திற்காகவோ ஆதாயத்திற்காகவோ இல்லை என்றும், இந்தியாவைப் பாதுகாக்கவே திமுக தலைமையிலான மதச்சார்பற்ற கூட்டணிக்கு ஆதரவு அளித்ததாகவும் கமல் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் மட்டும் பெரியாரின் பேரன் இல்லை; நானும் தான் பெரியாரின் பேரன் என்று கூறிய அவர், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் ஈவிகேஎஸ் இளங்கோவனை வெற்றி  பெற செய்ய வேண்டும் என்றும் கமல் பிரசாரம் செய்தார்.