முதலமைச்சரின் அடுத்த சுற்றுப்பயணம் இங்க தான்...2 நாள் பயணத்தின் முக்கிய அறிவிப்பு!

முதலமைச்சரின் அடுத்த சுற்றுப்பயணம் இங்க தான்...2 நாள் பயணத்தின் முக்கிய அறிவிப்பு!

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரும்  21 மற்றும் 22 ஆகிய தேதிகளில் திருச்சி, திருவாரூர் மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார்

"கள ஆய்வில் முதலமைச்சர்" என்ற புதிய திட்டத்தின் மூலம் பல்வேறு மாவட்டங்களுக்கும் பயணம் மேற்கொண்டு அரசு திட்டங்களை பார்வையிட்டு வருகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். இந்த நிலையில், 
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரும்  21-ம் தேதி காலை 10 மணிக்கு சென்னையிலிருந்து விமானம் மூலமாக திருச்சி செல்கிறார்.

அங்கு அரசு சார்பில் நடைபெறும் நிகழ்வில் நலத்திட்ட உதவிகளை வழங்கும் முதலமைச்சர், பின்னர் 22-ம் தேதி திருச்சியிலிருந்து சாலை மார்க்கமாக திருவாரூர் சென்று, திமுக கட்சி பிரமுகரின் இல்ல திருமண விழாவை நடத்தி வைக்கிறார்.

இதையும் படிக்க : களத்தில் குதித்த மாடுபிடிவீரரை தூக்கி வீசிய காளை...சோகத்தில் மூழ்கிய மக்கள்!

இதையடுத்து, அரசு சார்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்வில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்.

பின்னர் திருவாரூர் மாவட்டம் காட்டூரில் கட்டப்பட்டு வரும் பிரமாண்ட கலைஞர் அருங்காட்சியகத்தின் கட்டுமானப் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்ய உள்ளார். முதலமைச்சர் வருகையை முன்னிட்டு, இரு மாவட்டங்களிலும் பாதுகாப்பு முன்னேற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.