கொரோனா பாதித்தோரை இன்புளுயன்சா தாக்கினால் ஆபத்து - மருத்துவர்கள் எச்சரிக்கை!

கொரோனா பாதித்தோரை இன்புளுயன்சா தாக்கினால் ஆபத்து - மருத்துவர்கள் எச்சரிக்கை!

கொரோனா பாதிப்பிற்கு உள்ளான நபருக்கு இன்ஃப்ளூயன்சா நோய் ஏற்பட்டால் பாதிப்பு அதிகமாக இருக்கும் என மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.


கொரோனா, ஒமைக்ரானைத் தொடர்ந்து H3 N2 என்ற 'இன்புளுயன்சா' வைரஸ் மக்களை அச்சுறுத்தி வருகிறது. இதனால் ஹரியானா மற்றும் கர்நாடகாவில் 2 பேர் உயிரிழந்ததைத் தொடர்ந்து, தமிழ்நாட்டில் திருச்சியைச் சேர்ந்த ஒரு நபரும் நேற்று உயிரிழந்தார். இந்நிலையில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாகவுள்ள நபர்களையும் சிறுவர்களையும் 60 வயதிற்கு மேற்பட்டோரையும் இந்நோய் தீவிரமாக பாதிக்கும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். 

இதையும் படிக்க : ஆஸ்கர் விருது எதிரொலி...’ரகு’ யானையை காண குவியும் வெளிநாட்டினர்!

கொரோனா பாதித்தோரை இன்புளுயன்சா நோய் தாக்கினால் அதன் தாக்கம் அதிகம் இருக்கும் எனவும் ஆண்டுக்கு ஒருமுறை இன்புளுயன்சா தடுப்பூசி எடுத்துக் கொள்வதால் மக்கள் தங்களை தற்காத்துக் கொள்ள முடியும் எனவும் நுரையீரல் தொற்று நிபுணர் பென்ஹன் ஜோயல் தெரிவித்துள்ளார்.