ஆஸ்கர் விருது எதிரொலி...’ரகு’ யானையை காண குவியும் வெளிநாட்டினர்!

ஆஸ்கர் விருது எதிரொலி...’ரகு’ யானையை காண குவியும் வெளிநாட்டினர்!

தி எலிபென்ட் விஸ்பரர்ஸ், ஆஸ்கர் விருது வென்றதைத் தொடர்ந்து, அதில் இடம்பெற்ற முதுமலை யானையைக் காண வெளிநாட்டினர் உள்ளிட்டோர் ஆர்வம் காட்டி வருகின்றனர். 

95வது ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில், சிறந்த ஆவணக் குறும்படத்திற்கான விருதை ’தி எலிபென்ட் விஸ்பரர்ஸ்’ வென்றது. 

இதையும் படிக்க : இருளில் வசிப்பவர்களுக்கு விடியல் கிடைக்குமா? முதலமைச்சரிடம் கண்ணீர் மல்க கோரிக்கை!

இதன் எதிரொலியாக, விருது பெற்ற அப்படத்தில் இடம்பெற்றிருந்த ’ரகு’ என்ற யானையைக் காண மக்கள் கூட்டம் குவிந்து வருகிறது. 

அதன்படி, லண்டனில் இருந்து சென்ற ஒரு குடும்பத்தினர், ஆஸ்கர் விருதுவெல்லக் காரணமாக இருந்த யானைகளை பார்த்ததை அதிர்ஷ்டமாகக் கருதுவதாக மகிழ்வுடன் தெரிவித்தனர்.