அதிகரிக்கும் மின்விபத்துகள்.... நடவடிக்கை எடுக்குமா மின்வாரியம்?!!!

கடந்த ஆண்டு 758 மின் விபத்துகள் ஏற்பட்ட நிலையில், அதனைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்த வேண்டும் என துறை சார் அலுவலர்களை மின்வாரியம் அறிவுறுத்தியுள்ளது.

அதிகரிக்கும் மின்விபத்துகள்.... நடவடிக்கை எடுக்குமா மின்வாரியம்?!!!

கடந்த ஆண்டு ஏற்பட்ட மின் விபத்துகளின் எண்ணிக்கை 758 - தடுப்பு நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்த மின்வாரியம் உத்தரவு.

அதிகரிக்கும் மின்விபத்துகள்:

இது தொடர்பாக அனைத்து தலைமைப் பொறியாளர்கள் உள்ளிட்டோருக்கு தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் பகிர்மானப் பிரிவு இயக்குநர் அனுப்பிய சுற்றறிக்கையில்,
பாதுகாப்பு வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என பலமுறை அறிவுறுத்திய போதும், அதை செய்யத் தவறுவதால் துறை ரீதியாக உயிரிழப்பை ஏற்படுத்தும் மின் விபத்துகள் தொடர்ந்து அதிகரித்த வண்ணமே உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பயிற்சி வகுப்புகள்:

அதிகளவில் பாதுகாப்பு தொடர்பான வகுப்புகள் எடுக்கப்பட்டதாக தலைமைப் பொறியாளர்கள் கூறினாலும், கள அளவில் யாருமே பாதுகாப்பு விதிகளைப் பின்பற்றுவது இல்லை என விபத்து நடந்த இடங்கள் மூலமாக அறிய முடிகிறது என்றும், விபத்துக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதை விடுத்து களப் பணியாளர்களுக்கு போதிய பாதுகாப்பு விதிகளை பயிற்றுவிப்பதன் மூலமே மின் விபத்துகளைக் குறைக்க முடியும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மின்விபத்துகள்:

கடந்த ஆண்டு மின்சார துறைக்குள்ளேயே உயிரிழப்பை ஏற்படுத்திய 25 விபத்துகளும், உயிரிழப்பு அல்லாமல் 120 மின்விபத்துகளும் நிகழ்ந்துள்ளதாகவும், இதே போல் மின்சாரத்துறை ரீதியாக அல்லாமல் உயிரிழப்பை ஏற்படுத்திய 467 விபத்துகளும், உயிரிழப்பின்றி 276 விபத்துகளும் நிகழ்ந்துள்ளது என்றும், இது தவிர்த்து  276 மிருகங்களை மின்சாரம் தாக்கியுள்ளதாகவும், இந்த பிரச்சனையை கவனமாக கையாள வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

முழுமையான ஆய்வு:

அந்த வகையில் பாதுகாப்பு தொடர்பான வகுப்புகளைத் தொடர்ச்சியாக நடத்துவதோடு, மின் கம்பம் ஏறும் முன் அதனை முழுமையாக ஆய்வு செய்ய வேண்டும் என்றும், மின் கம்பிகளுக்கு அருகே அனுமதியின்றி கட்டுமானம் மேற்கொள்வோருக்கு நோட்டீஸ் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 11 விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தனிக்கவனம்:

மேலும், மின் விபத்து ஏற்படும்போது அதில் அனைத்து தலைமைப் பொறியாளர்கள் மற்றும் கண்காணிப்பு பொறியாளர்கள் தனிக்கவனம் செலுத்தி, அதற்கான காரணம் குறித்து கண்டறிந்து களப்பணியாளர்களுக்கு அறிவுறுத்தல்களை வழங்குவதன் மூலம் வரும் காலங்களில் மின்விபத்துகளைத் தடுக்க முடியும் எனவும் சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

-நப்பசலையார்

இதையும் படிக்க:   அண்ணா ஒரு சகாப்தம்.... திமுக என்னும் மூன்றெழுத்து செழித்தோங்க காரணமான மூன்றெழுத்து!!!