ஐடி நிறுவனங்களில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை...!

சென்னை தரமணி மற்றும் காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் வருமான வரித் துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். 

சென்னை தரமணி மற்றும் பழைய மகாபலிபுரம் சாலையை இணைக்கும் எம்.ஜி.ஆர் சாலையில் உள்ள பிளக்ட்ரானிக்ஸ் என்ற மென்பொருள் நிறுவனத்தில் காலை முதல் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிறுவனத்தில் வரி ஏய்ப்பு செய்வதாக பெறப்பட்ட புகார்களின் பேரில் பெங்களூருவில் இருந்து வந்திருக்கும் 8 பேர் கொண்ட வருமான வரித்துறை அதிகாரிகள் குழுவினர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதையும் படிக்க : தன்னைத் தானே மாய்த்துக் கொண்ட 11 வயது சிறுமி...போலீசார் தீவிர விசாரணை!

இதேபோல், காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த சுங்குவார்சத்திரம் பகுதியில் உள்ள பிளக்ஸ் தொழிற்சாலையிலும் சோதனை நடைபெற்று வருகிறது. அனைத்து விதமான ஸ்மார்ட் போன்களுக்கும் உதிரிபாகங்கள் தயாரிக்கும் இந்த நிறுவனத்தில் பல கோடி ரூபாய் வரி ஏய்ப்பு நடைபெறுவதாக அளித்த புகாரின் பேரில், சென்னையில் உள்ள வருமான வரித் துறை அதிகாரிகள் 10 பேர் சோதனை நடத்தி வருகின்றனர்.