தேசிய அளவில் பதக்கம் வென்றவர்களுக்கு ஊக்கத் தொகை வழங்கினார் முதலமைச்சர்...!

தேசிய அளவில் பதக்கம் வென்றவர்களுக்கு ஊக்கத் தொகை வழங்கினார் முதலமைச்சர்...!

தேசிய அளவில் பதக்கம் வென்ற 134 வீரர் - வீராங்கனைகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சான்றிதழ்களையும், ஊக்கத் தொகைகளையும் வழங்கினார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், கேலோ இந்தியா உள்ளிட்ட போட்டிகளில் பங்கேற்று பதக்கம் வென்ற வீரர் - வீராங்கனைகள் கலந்து கொண்டனர். அப்போது, பதக்கம் வென்ற 134 பேருக்கு சுமார் 2 கோடி ரூபாய் மதிப்பிலான ஊக்கத் தொகையை முதலமைச்சர் வழங்கினார். 

இதையும் படிக்க : வெற்றி மாறனின் வெற்றி பயணங்கள்...!

இதனைத் தொடர்ந்து, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை பதக்கம் வென்ற வீரர் - வீராங்கனைகள் சந்தித்தனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த விளையாட்டு வீரர்கள், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஊக்கத் தொகை வழங்கியது தங்களை மேலும் ஊக்கம் அடையச் செய்துள்ளதாக மகிழ்ச்சி தெரிவித்தனர்.