மூன் லைட் சினிமாஸ்: கொட்டும் மழையிலும் திரைப்படத்தை கண்டு ரசித்த மக்கள்!!

மூன் லைட் சினிமாஸ்: கொட்டும் மழையிலும் திரைப்படத்தை கண்டு ரசித்த மக்கள்!!

சென்னை தினத்தை முன்னிட்டு, திருவான்மியூர் கடற்கரையில் திரையிடப்பட்ட இறுதி சுற்று திரைப்படத்தை கொட்டும் மழையிலும் பொதுமக்கள் கண்டு ரசித்தனா். 

வந்தாரை வாழவைக்கும் சென்னைக்கு  கடந்த மாதம் ஆகஸ்ட் 22-ம் தேதியோடு வயது 384 ஆனது. இதனைக் கொண்டாடும் விதமாக சென்னை மாநகராட்சி மற்றும் சென்னை ஸ்மார்ட் சிட்டி லிமிடெட் சார்பில் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. 

மூன் லைட் சினிமாஸ் என்ற பெயரில் கடற்கரைகளில் திரைப்படம் திரையிடப்பட்டு வருகிறது. கடந்த வாரம் பெசன்ட் நகர் கடற்கரையில் மதராசபட்டினம் மற்றும் சென்னை 600028 திரைப்படம் திரையிடப்பட்டது.

அதன் தொடர்ச்சியாக நேற்று திருவான்மியூர் கடற்கரையில்  மாலை 5 மணியளவில் திரைப்படம் திரையிடப்பட்டது. இறுதிச் சுற்று, மெட்ராஸ் என 2 திரைப்படங்கள் திரையிடப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.

வார இறுதி நாளான நேற்று விடுமுறை என்பதால் வேலைக்கு செல்பவர்கள், பெண்கள், குழந்தைகள் மாணவர்கள் என 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கண்டு ரசித்தனர். அப்பொழுது கனமழை பெய்ததால், இறுதிச் சுற்று திரைப்படம் இரண்டு முறை நிறுத்தப்பட்டு, மழை நின்ற பிறகு மீண்டும் திரையிடப்பட்டது.

கனமழை பெய்ததால், இருமுறை நிறுத்தப்பட்டு படம் தொடரப்பட்டாலும், மக்கள் கலைந்து செல்லாமல், இறுதி வரையிலும் காத்திருந்து பார்த்துள்ளனர்.

இதையும் படிக்க || "தெரு முனை கூட்டத்தை கூட நடத்த முடியாத ஓபிஎஸ், தாக்கத்தை எப்படி ஏற்படுத்துவார்" ஜெயக்குமார் கேள்வி!!