நம்பர் 1 முதலமைச்சர் பெருமையல்ல...தமிழ்நாடு நம்பர் 1 ஆகும்போதுதான்...முகஸ்டாலின் பேச்சு!

நம்பர் 1  முதலமைச்சர் பெருமையல்ல...தமிழ்நாடு நம்பர் 1 ஆகும்போதுதான்...முகஸ்டாலின் பேச்சு!

நம்பர் ஒன் முதலமைச்சர் என்பதல்ல, நம்பர் ஒன் தமிழ்நாடு என்பதே தனக்குப் பெருமை என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

மணமக்களை வாழ்த்திய ஸ்டாலின்:

தஞ்சை வடக்கு மாவட்ட திமுக துணை செயலாளர் கோவி. அய்யாராசு அவர்களின் இல்லத் திருமண விழாவில் முதலமைச்சர் முக ஸ்டாலின் கலந்துக்கொண்டு மணமக்களுக்கு தாலி எடுத்துக்கொடுத்து வாழ்த்தினார். அதன்பின் மேடையில் பேசிய முதலமைச்சர், மணக்கோலம் பூண்டிருக்கும் மணமக்களை வாழ்த்துகிற நேரத்தில் நான் நிறைவாகச் சொல்ல விரும்புவது, நீங்கள் குழந்தைகளை அளவோடு பெற்று, வளமோடு வாழ வேண்டும் என்று கூறி வாழ்த்தினார். 

மாறி வரும் காலக்கட்டம்:

முந்தைய காலகட்டத்தில் எவ்வளவு வேண்டுமானாலும் குழந்தைகளை பெற்று கொள்ளலாம் என்று இருந்தது. ஆனால் அந்த வழக்கம் என்பது படிபடியாக குறைந்து நாமிருவர் நமக்கு மூவர் என்று இருந்தது, அடுத்தபடியாக நாமிருவர் நமக்கு இருவர் ஆனது, தற்போது நாமிருவர் நமக்கு ஒருவர் என்றானது, அடுத்து நாமிருவர் நமக்கு எதுக்கு இன்னொருவர் என்ற காலகட்டத்தை நோக்கி சென்றுக்கொண்டிருப்பதாக தெரிவித்தார்.

பிரச்சாரம் செய்யும் அரசாங்கம்:

அதன்படி, இன்றைக்கு மத்திய அரசாங்கமாக இருந்தாலும் சரி, மாநில அரசாங்கமாக இருந்தாலும் சரி - குடும்பக் கட்டுப்பாட்டிற்காகப் நிதி ஒதுக்கி, பல கோடி ரூபாய் செலவு செய்து பிரச்சாரத்தை நடத்திக் கொண்டிருக்கிறது. அதனால் நீங்கள்  குழந்தைகளை அளவோடு பெற்றெடுக்க வேண்டும்  என கூறினார்.

தமிழ் பெயரை சூட்டுங்கள்:

மேலும், அப்படி நீங்கள் பெற்றெடுக்கும் குழந்தைகளுக்கு அழகான தமிழ் பெயர்களை சூட்டுங்கள், ஏனென்றால் தமிழுக்கு சிறப்பு சேர்த்திருப்பவர் கலைஞர் அவர்கள், அதனால் உங்கள் குழந்தைக்கு நல்ல தமிழ் பெயரை சூட்டுங்கள் என்று முதலமைச்சர் மணமக்களிடம்  வலியுறுத்தினார். 

நம்பர் 1 ஆகும்போதுதான் பெருமை:

தொடர்ந்து பேசிய அவர், ஆட்சிக்கு வந்த போது கொரோனாவையும், தற்போது புயலையும் வெற்றிகரமாக எதிர்கொண்டதாக தெரிவித்தார். ”எனக்கு நம்பர் ஒன் முதலமைச்சர் என்பதல்ல; தமிழ்நாடு நம்பர் 1 ஆகும்போதுதான் எனக்கு பெருமை" என்று கூறினார்.

Related Stories

No stories found.
logo
Malaimurasu Seithigal Tv
www.malaimurasu.com