பழனி கோவிலுக்கு சென்ற இலங்கை ஆளுநர்...! தமிழக மீனவர்கள் குறித்த கேள்வியை தவிர்த்த சம்பவம்...!

பழனி கோவிலுக்கு சென்ற இலங்கை ஆளுநர்...! தமிழக மீனவர்கள் குறித்த கேள்வியை தவிர்த்த சம்பவம்...!

திண்டுக்கல் மாவட்டம் பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் இலங்கையின் கிழக்கு மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜன் சாமி தரிசனம் மேற்கொண்டார். அப்போது கோவில் நிர்வாகத்தினர் வரவேற்பு அளித்து ரோப் கார் மூலமாக மலைக்கோவிலுக்கு அழைத்துச் சென்றனர்.

பின்னர் உச்சிக்கால பூஜையில் தரிசனம் செய்தார். தொடர்ந்து அவருக்கு கோவில் நிர்வாகத்தின் சார்பில் பிரசாதங்கள் வழங்கப்பட்டது. முன்னதாக இலங்கை நாட்டின் யாழ்ப்பாணம் பகுதியில் விரைவில் நடக்கவுள்ள யாகத்திற்காக புலிப்பாணி ஆசிரமத்தில் உள்ள சிவானந்த புலிப்பாணி சுவாமிகளை அழைப்பதற்கான அழைப்பிதழ்களை கொடுத்து வரவேற்றார். 

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய ஜீவன் தியாகராஜனிடம் இலங்கை நாட்டில் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவது குறித்து கேள்வி எழுப்பிய போது, அதற்கு பதில் அளிக்க முடியாது எனவும், அதேபோல் இலங்கையில் பொருளாதார சூழ்நிலை குறித்த கேள்விக்கும் பதில் அளிக்க மறுத்தும் சென்றுள்ளார். மேலும் தான் சுவாமி தரிசனம் செய்யவே வந்துள்ளேன் எனவும் கூறி சென்றுள்ளார்.

இதையும் படிக்க : ஒரு கையில் இவ்வளவு வேகமாக டைப்பிங்கா...? அசத்தும் 10 ஆம் வகுப்பு மாணவி...!