மதுபோதையில் தகராறு செய்த தந்தை....! தீர்த்துக்கட்டிய மகன்...!

மதுபோதையில் தகராறு செய்த தந்தை....! தீர்த்துக்கட்டிய மகன்...!

பொள்ளாச்சி தாராபுரம் சாலை பூசாரி பட்டி அருகே உள்ள கரப்பாடியில் வசிப்பவர் சிவலிங்கம். இவரது மனைவி சித்ராதேவி இவர்களுக்கு கார்த்திக் என்ற மகன் உள்ளார். சிவலிங்கம் கூலி வேலைக்கும், கார்த்திக் கரப்பாடி பகுதியில் சரக்கு வாகனமும் ஓட்டி வருகின்றனர்.

இந்நிலையில் சிவலிங்கம் அவரது மனைவி சித்ராதேவியை தினமும் குடித்து விட்டு துன்புறுத்தி வந்துள்ளதாக தெரிகிறது. கார்த்திக்  தனது தந்தை சிவலிங்கத்தை பலமுறை கண்டித்துள்ளார். ஆனால் சிவலிங்கம் தனது மனைவியிடம் கடந்த இரண்டு நாட்களாக சண்டையிட்டுள்ளார். இதனால் சித்ரா தேவி கோபித்து கொண்டு உறவினர் வீட்டுக்கு சென்றுவிட்டார். நேற்று மாலை சிவலிங்கம் பூசாரிபட்டி மதுபான கடையில் இருந்தபோது அங்கு வந்த கார்த்திக், தான் மறைந்து வைத்து இருந்த அரிவாள் எடுத்து சரமாரியாக வெட்டியதில் சிவலிங்கம் உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து தலைமறைவாக உள்ள கார்த்திக்கை தனி படை போலீசார் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதையும் படிக்க : நாணயங்களை விழுங்கிய முதியவர்...! அறுவை சிகிச்சை மூலம் அகற்றிய சம்பவம்...!