அரசு ஒப்பந்ததாரா் வீட்டில் 7 மணி நேரத்திற்கும் மேலாக நீட்டித்த சோதனை...!

அரசு ஒப்பந்ததாரா் வீட்டில் 7 மணி நேரத்திற்கும் மேலாக நீட்டித்த சோதனை...!

கரூா் மாவட்டம் குளித்தலை அருகே அரசு ஒப்பந்ததாரா் வீட்டில் நடந்த வருமான வாித்துறை சோதனையில் 1 லட்சம் ரூபாய் ரொக்கப்பணம் உள்ளிட்டவற்றை அதிகாாிகள் பறிமுதல் செய்தனா். 

கரூர் மாவட்டத்தில் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியின் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வீடுகளில் தொடர்ந்து ஏழு நாட்களாக வருமானவரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதையும் படிக்க : கருணாநிதி நூற்றாண்டு விழா கோலாகலத் தொடக்கம்...இலச்சினை வெளியிடுகிறார் முதலமைச்சர்!

இந்நிலையில் தற்போது எழுதியாம்பட்டியில் உள்ள அரசு ஒப்பந்ததாரர் எம்.சி. சங்கர் ஆனந்த் வீட்டில் சுமார் 7 மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த இந்த சோதனையில் 1 லட்சத்து 17 ஆயிரம் ரூபாய் ரொக்கப்பணம் மற்றும் ஹார்ட் டிஸ்க்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.