கருணாநிதி நூற்றாண்டு விழா கோலாகலத் தொடக்கம்...இலச்சினை வெளியிடுகிறார் முதலமைச்சர்!

கருணாநிதி நூற்றாண்டு விழா கோலாகலத் தொடக்கம்...இலச்சினை வெளியிடுகிறார் முதலமைச்சர்!

கலைஞர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவையொட்டி சென்னையில் நடைபெறும் விழாவில் முதலமைச்சர் முக.ஸ்டாலின் இலட்சினையை வெளியிடுகிறார்.

முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் பிறந்த நாள் ஜூன் 3-ந் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில், அதனை இந்த ஆண்டு முழுவதும் நூற்றாண்டு விழாவாக கொண்டாட முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், சென்னை கலைவாணர் அரங்கில் கருணாநிதியின் நூற்றாண்டு தொடக்க விழா நடைபெறுகிறது. 

இதையும் படிக்க : மாமன்னன் இசை வெளியீட்டு விழா... !

நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு இலச்சினை வெளியிட்டு சிறப்புரை ஆற்ற உள்ளார். முன்னதாக, சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள அண்ணா, கலைஞர் நினைவிடங்களில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்துகிறார்.