ஈரோடு(கி) இடைத்தேர்தல்: அமைச்சர் முத்துசாமியின் வீட்டில் குவியும் தேர்தல் பணிக்குழு உறுப்பினர்கள்...!

ஈரோடு(கி) இடைத்தேர்தல்: அமைச்சர் முத்துசாமியின் வீட்டில் குவியும் தேர்தல் பணிக்குழு உறுப்பினர்கள்...!

ஈரோடு இடைத்தேர்தல் தொடர்பாக அமைச்சர் முத்துசாமியின் இல்லத்தில் தமிழ்நாட்டின் பல்வேறு அமைச்சர்கள் முகாமிட்டு வருகின்றனர்.

ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அனைத்து கட்சிகளும் தேர்தல் வியூகம் அமைத்து அதற்கான பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

அந்த வகையில் ஈரோடு கிழக்கு தொகுதிக்கு திமுக சார்பில் 32 பேர் கொண்ட தேர்தல் பணிக்குழு நியமிக்கப்பட்டுள்ள நிலையில், கூட்டணி கட்சி வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவனை ஆதரித்து அமைச்சர்கள் முத்துசாமி, கே.என்.நேரு, நாசர், காங்கிரஸ் சட்டமன்ற குழு உறுப்பினர் செல்வபெருந்தகை உட்பட பலர் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிக்க : மாற்றுத்திறனாளிகளுக்கான புனர்வாழ்வு மையத்தை திறந்து வைத்தார் முதலமைச்சர்...!

இந்நிலையில் காலை முதலே அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன், செந்தில் பாலாஜி, மாவட்ட செயலாளர்கள் உள்ளிட்ட பல்வேறு தேர்தல் பணிக்குழு உறுப்பினர்கள் தொடர்ச்சியாக அமைச்சர் முத்துச்சாமி இல்லத்திற்கு வந்த வண்ணம் உள்ளனர்.

மேலும் பெருந்துறை மேட்டுக் கடையில் அமைந்துள்ள தங்கம் மகாலில் திமுக தரப்பில் நியமிக்கப்பட்டுள்ள தேர்தல் பணிக்குழு உறுப்பினர்கள் கூட்டத்தில் பங்கேற்று ஆலோசனையிலும் ஈடுபட உள்ளனர்.