ஆசிரியர் தகுதித் தேர்வு 2ம் தாள் எப்போ தெரியுமா?வெளியானது அறிவிப்பு!

ஆசிரியர் தகுதித் தேர்வு 2ம் தாள் எப்போ தெரியுமா?வெளியானது அறிவிப்பு!

ஆசிரியர் தகுதித் தேர்வு 2ஆம் தாளுக்கான கணினி வழித் தேர்வுக்கான தேதியை ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.

ஆசிரியர் தகுதித் தேர்வு வாரியம் வெளியிட்ட அறிவிப்பு :

ஆசிரியர் தகுதித் தேர்வு 2ஆம் தாளுக்கான கணினி வழித் தேர்வு, பிப்ரவரி 3 முதல் 14 ஆம் தேதி வரை நடைபெறும் என ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வு 2022ஆம் ஆண்டிற்கான ஆசிரியர் தகுதித் தேர்வு தாள் 2 ற்கான கணினி வழித் தேர்வுகள் ஆசிரியர் தேர்வு வாரியத்தால் ஜனவரி 31 முதல் பிப்ரவரி 12 ஆம் தேதி வரை இருவேளைகளில் நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது என ஜனவரி 3 ஆம் தேதியன்று ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் பத்திரிக்கைச் செய்தி வெளியிடப்பட்டது.

இதையும் படிக்க : ஈரோடு தொகுதி அ.தி.மு.க வேட்பாளர் யார்?!!!

ஆனால், தற்போது பிப்ரவரி 3 முதல் 14 ஆம் தேதி வரையிலும் நடைபெற உள்ள கணினி வழித் தேர்விற்கான கால அட்டவணை ஆசிரியர் தேர்வு வாரிய இணையத்தளத்தில் இன்று வெளியிடப்படுகிறது.  

தொடர்ந்து, கணினி வழித் தேர்வுக்கான ஹால்டிக்கெட்டுகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. அதன்படி, தேர்வு மையங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்ட முதலாம் அனுமதிச்சீட்டு இன்று முதலும், தேர்வு மையம் குறிப்பிடும் 2ம் அனுமதிச்சீட்டு தேர்வுத் தேதிக்கு 3 நாட்களுக்கு முன்னதாகவும் வெளியிடப்படும் என கூறப்பட்டுள்ளது. தொடர்ந்து ஆசிரியர் தேர்வு வாரிய www.trh.tn.nicinல் இணையதளத்தில் கூடுதல் தகவல்களை தேர்வர்கள் அறிந்து கொள்ளலாம் எனவும் கூறப்பட்டுள்ளது.