கொரோனாவில் இருந்து மீண்டுள்ள ஈவிகேஎஸ் இளங்கோவன்...மருத்துவமனை நிர்வாகம் அறிவிப்பு!

கொரோனாவில் இருந்து மீண்டுள்ள ஈவிகேஎஸ் இளங்கோவன்...மருத்துவமனை நிர்வாகம் அறிவிப்பு!

Published on

நெஞ்சு வலியால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த காங்கிரஸ் மூத்த தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு கொரோனா நெகட்டிவ் என ரிசல்ட் வந்துள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

சமீபத்தில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் வெற்றி பெற்று, ஈரோடு சட்டமன்ற எம்.எல்.ஏவாக பொறுப்பேற்றார் காங்கிரஸ் மூத்த தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன். கடந்த 15 ஆம் தேதி திடீரென ஏற்பட்ட நெஞ்சு வலி காரணமாக  போரூர் தனியார் மருத்துவமனையில் ஈவிகேஎஸ் அனுமதிக்கப்பட்டார். 

முதலில் நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனைக்கு மருத்துவமனைக்கு வந்த ஈவிகேஎஸ்க்கு ,  XBB வகை கொரோனா பாதிப்புடன் நுரையீரல் பாதிப்பும் கண்டறியப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில் இயல்பான சுவாசம் மேற்கொள்ள முடியாமல் ஈவிகேஎஸ் இளங்கோவன் மூச்சுத் திணறலால் அவதிப்பட்டு வருவதாக கூறப்பட்ட நிலையில், கொரோனா தொற்றிலிருந்து ஈவிகேஎஸ் மீண்டுள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் அறிக்கையின் மூலம் தெரிவித்துள்ளது.

அந்த அறிக்கையில், காங்கிரஸின் மூத்த தலைவரும், ஈரோடு சட்டமன்ற எம்.எல்.ஏவுமான ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு, தற்போது கொரோனா நெகட்டிவ் வந்துள்ளதாகவும், இதய செயலிழப்பு பாதிப்பில் இருந்து குணமடைந்து வருவதாகவும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com