உலக தண்ணீர் தினம்...முதலமைச்சர் விழிப்புணர்வு பதிவு...!

உலக தண்ணீர் தினம்...முதலமைச்சர் விழிப்புணர்வு பதிவு...!

உலக தண்ணீர் தினத்தையொட்டி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தண்ணீரின் அவசியம் குறித்த விழிப்புணர்வு காணொளியை வெளியிட்டுள்ளார். 

ஆண்டுதோறும் மார்ச் 22 ஆம் தேதி உலக தண்ணீர் தினம் கொண்டாடப்படுகிறது. அதன்படி, மார்ச் 22 ஆம் தேதியான இன்று உலக தண்ணீர் தினம் என்பதால், இந்நாளில் மக்களுக்கு தண்ணீர் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், 

உயிர் வாழ காற்று எவ்வளவு முக்கியமோ அதே அளவு முக்கியமானது தண்ணீர். இப்பூவுலகில் வாழும் அனைத்து உயிர்களுக்கும் அடிப்படையானது தண்ணீர். உலகம் எந்தளவுக்கு உயர்ந்தாலும், மாறினாலும், மாறுதலை அடைந்தாலும் தண்ணீரின் தேவை என்பது மாறாது. அதனால் தான் நீரின்றி அமையாது உலகு என்றார் அய்யன் வள்ளுவர்.

இதையும் படிக்க : தமிழ்நாடு முழுவதும் இன்று கிராம சபை கூட்டம்...!

நமது உடலில் அனைத்து செயல்பாடுகளும் முறையாக செயல்பட தண்ணீர் மிகமிக அவசியம். உணவின்றி கூட மனிதரால் பல நாட்கள் இருக்க முடியும். ஆனால் நீரின்றி இருக்க முடியாது. இத்தகைய உயிர்நாடியான தண்ணீரை நாம் காக்க வேண்டும். அதாவது நம்மைக் காக்கும் தண்ணீரை நாம் காக்க வேண்டும். நீரை வீணாக்கக் கூடாது. பாதுகாப்பாகவும், தூய்மையாகவும் வைத்திருக்க வேண்டும். நீர்நிலைகளை மாசுபடாமல் தூர்வாரி வைத்திருக்க வேண்டும், புவி வெப்பமயமாகி வருவதால் நம்மைக் காப்பது தண்ணீர் தான். நீர் இல்லையேல் உயிர் இல்லை என்பதை நீங்கள் அனைவரும் உணர வேண்டும். எனவே, தண்ணீரைக் காப்போம் தாய்நிலத்தைக் காப்போம் இவ்வாறு முதலமைச்சர் வீடியோவில் தெரிவித்துள்ளார்.