திமுகவை எதிர்க்க - எதிர்கட்சிகள் ஒரு அணி கூட்டணி செயல்பட ரெடி - விருப்பம் தெரிவிக்கும் டிடிவி தினகரன்

திமுகவை எதிர்க்க - எதிர்கட்சிகள் ஒரு அணி  கூட்டணி  செயல்பட ரெடி - விருப்பம் தெரிவிக்கும் டிடிவி தினகரன்

திமுகவை எதிர்ப்பதற்கு ரெடி

திமுகவை எதிர்க்க எதிர்க்கட்சிகள் இணைந்து ஒரு நல்ல கூட்டணி அமைந்தால் அதை கண்டிப்பாக ஆதரிப்போம் என அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் பேட்டிஅண்ணாவின் 54 ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு சென்னை ராயப்பேட்டை கட்சி அலுவலகத்தில் அமைக்கப்பட்டிருந்த அண்ணாவின் திருவுருவப்படத்திற்கு மரியாதை செலுத்திய பின்னர் அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச் செயலாளர் செய்தியாளர்களை சந்தித்தார்.

உண்மையான தர்ம யுத்தம் இப்போதுதான் தொடங்கியிருக்கிறது: டிடிவி தினகரன் | The  real war has just begun: TTV Dhinakaran - hindutamil.in

மேலும் படிக்க| யாருக்கு ஆதரவு...? ஈபிஎஸ், ஓபிஎஸ் - ஐ நேரில் சந்தித்த அண்ணாமலை

திமுக மக்களை ஏமாற்றுகிறது

திமுக திருந்தி விட்டது என நம்பி மக்கள் ஆட்சியை திமுகவுக்கு கொடுத்து விட்டனர். ஆனால் அவர்கள் மீண்டும் மக்களை ஏமாற்றி தான் வருகின்றனர் என்றும்,60 மாதங்களில் பெற வேண்டிய கெட்ட பேரை தற்போது 20 மாதங்களில் பெற்றுவிட்டனர் என தெரிவித்தார்.அதனால்,தீய சக்தி திமுகவை வீழ்த்த ஒரு அணியில் இணைந்து செயல்பட வேண்டும் ஒரு அணி  என்றால் கூட்டணியில் இணைந்து செயல்பட வேண்டும் என தெரிவித்தார். திமுகவை தார்மீகமாக எதிர்க்க வேண்டிய பொறுப்பு எங்களுக்கு உள்ளது என தெரிவித்தார். நல்ல வேட்பாளர் இளம் வேட்பாளர் மக்களுக்கு அறிமுகம் ஆனவர் அதனால், நாங்கள் கடந்த முறையை விட இந்த முறை சிறப்பாக செயல்படுவோம்.,தீய சக்தி திமுகவை எதிர்க்க எதிர்க்கட்சிகள் ஒரு நல்ல கூட்டணி அமைத்தால் அதை கண்டிப்பாக நாங்கள் ஆதரிப்போம் என தெரிவித்தார்.

மேலும் படிக்க| அண்ணா ஒரு சகாப்தம்.... திமுக என்னும் மூன்றெழுத்து செழித்தோங்க காரணமான மூன்றெழுத்து!!!

 நான் பழனிச்சாமி போல உச்சத்தில் இருந்து செயல்படுபவன் அல்ல

 நான் பழனிச்சாமி போல உச்சத்தில் இருந்து செயல்படுபவன் அல்லமேலும் என்றும் , திமுகவை வீழ்த்துவதற்காக ஓ.பன்னீர்செல்வம் செயல்பட்டால் அவருடன் இணைந்து பேச திறந்த மனதோடு இருக்கிறேன் என தெரிவித்தார்.ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் ஆறாயிரம் ரூபாய் திமுகவினர் கொடுத்தனர்.தற்போது ஈரோடு கிழக்கு தேர்தலில் எட்டாயிரம் ரூபாய் கொடுக்க திட்டமிட்டுள்ளனர்.அது குறித்த அமைச்சர் கே.என் நேரு பேசிய ஆடியோவை செய்தி நிறுவனங்கள் ஒளிபரப்பு செய்ததை பார்த்துள்ளோம் எனக் கூறினார்.

டாஸ்மாக் மதுக்கடைகளை மூடாதது ஏன்? டிடிவி தினகரன் கேள்வி - குமுதம் செய்தி  தமிழ்

பேனா நினைவு சின்னம் வீண்

மெரினா கடலில் பேனா நினைவு சின்னம் அமைப்பது தேவையற்றது. முதல்வர் ஸ்டாலினின் செயல் நீரோ மன்னன் பிடில் வாசிப்பதை போன்று உள்ளது. திமுகவுடன் அதிக அளவு நிதி உள்ளது எனவே அரசு பணத்தில் நினைவுச் சின்னம் அமைக்காமல் திமுக நிதியில் நினைவு சின்னம் அமைக்கலாம். மெரினாவில் நீதிமன்றம் கொடுத்துள்ள கலைஞர் நினைவிடத்தில் 100 அடிக்கு கூட நினைவு சின்னம் அமைத்துக் கொள்ளலாம் என தெரிவித்தார்.பேனா நினைவுச்சின்னம் கடலில் அமைந்தால் உடைப்பேன் என்று சொல்லுவதை விட அகற்றுவேன் என்று சீமான் கூறியிருக்கலாம் உணர்ச்சி வேகத்தில் அவ்வாறு பேசியிருப்பார்.மத்திய பட்ஜெட்டில் உள்ள குறைகளை ஏற்கனவே சுட்டிக் காண்பித்து இருக்கிறேன். மத்திய பட்ஜெட்டில் இளைஞர்களுக்கான வேலை வாய்ப்புகள் பெரிய அளவில் உருவாக்கப்படவில்லை