குடிசை இல்லாதப் பகுதிகளை உருவாக்குவதே எங்களின் குறிக்கோள் - முதலமைச்சர் பேச்சு!

குடிசை இல்லாதப் பகுதிகளை உருவாக்குவதே எங்களின் குறிக்கோள் - முதலமைச்சர் பேச்சு!

Published on

குடிசை இல்லாப் பகுதிகள் உருவாகுவதை குறிக்கோளாக கொண்டு திமுக அரசு செயல்படுவதாக, சென்னை வர்த்தக மையத்தில் வீட்டுமனை விற்பனைக் கண்காட்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் கிரேடாய் சென்னை சார்பில் நடைபெறும் கிரேடாய் FAIRPRO 2023 என்ற வீடு, மனை விற்பனை கண்காட்சியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். 70க்கும் மேற்பட்ட கட்டுமானத் திட்டங்கள் காட்சிபடுத்தப்பட்ட இந்நிகழ்வில், 10 கோடி ரூபாய் வரையிலான வீடு, மனைகள் காட்சிபடுத்தப்பட்டுள்ளன. 

தொடர்ந்து இந்நிகழ்ச்சியில்  பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மனைப்பிரிவுகளுக்கு விரைந்து ஒப்புதல் வழங்குவதற்கு ஒற்றை சாளர முறை செயல்பாட்டில் உள்ளதாக தெரிவித்தார். புதிய துணைக்கோள் நகரங்கள் உருவாக்கப்பட்டு வருவதாகவும், குடிசை இல்லாப் பகுதிகள் உருவாவதே திமுகவின் குறிக்கோள் எனவும் அவர் கூறினார். 

மேலும், 2031ம் ஆண்டிற்குள் நகரவாசிகளின் எண்ணிக்கை 5 கோடியே 34 லட்சமாக அதிகரிக்கும் எனவும், தமிழ்நாட்டில் 49 சதவீதம் பேர் நகரங்களில் வாழ்வதாகவும் முதலமைச்சர் குறிப்பிட்டார்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com