கருணாநிதியின் நூற்றாண்டு பிறந்த நாள் விழாவை ஆண்டு முழுவதும் கொண்டாட தீர்மானம்...!

கருணாநிதியின் நூற்றாண்டு பிறந்த நாள் விழாவை ஆண்டு முழுவதும் கொண்டாட தீர்மானம்...!

மறைந்த முதலமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு பிறந்த நாள் விழாவை ஆண்டு முழுவதும் கொண்டாடுவது என தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.   


மறைந்த முதலமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு தொடக்கவிழா மாநாடு திருவாரூரில் ஜூன் 3 தேதி நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு, தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது.

இதையும் படிக்க : கொரோனாவில் இருந்து மீண்டுள்ள ஈவிகேஎஸ் இளங்கோவன்...மருத்துவமனை நிர்வாகம் அறிவிப்பு!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில்,  திமுக பொது செயலாளர் துரைமுருகன், துணை பொது செயலாளர்கள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் பங்கேற்றனர்.

தொடர்ந்து கூட்டத்தில், கருணாநிதியின் நூற்றாண்டு பிறந்தநாள் விழாவை ஆண்டு முழுவதும் சிறப்பாக கொண்டாடுவது என்றும், ஜூன் 3-ம் தேதிக்குள் தி.மு.க.வில் ஒரு கோடி உறுப்பினர்களை சேர்க்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.